அமர்க்களம் 2.0: அஜித்தும் ஷாலினியும் மீண்டும் இணைந்தால் தமிழ் சினிமா தாங்குமா?

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகள் என்று சொன்னால் அது அஜித்தும் ஷாலினியும் தான். அமர்க்களம் படத்தில் ஆரம்பித்து நிஜ வாழ்க்கையிலும் இணைந்த இவர்களை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பது லட்சக்கணக்கான ரசிகர்களின் பல கால கனவு. ஒருவேளை நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இவர்கள் இருவரும் ஒரு முதிர்ச்சியான காதல் கதையில் நடித்தால் எப்படியிருக்கும்?

திரையுலகில் பல நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும், அஜித்தும் ஷாலினியும் ஒரு தனி ரகம். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி தனது கேரியரை முழுமையாக விட்டுவிட்டு குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். ஆனாலும், இன்றும் அவர்களைப் பற்றிய ஒரு சிறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வந்தாலே அது காட்டுத்தீயாய் பரவும்.

ஆம் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க பேச்சி வார்த்தை போகிறதாம். இந்த படத்தை அஜித்தே தயாரிக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அரசல் புரசலாக செய்திகள் பரவி வருகிறது.

இப்போதிருக்கும் ‘வினோத்’ அல்லது ‘மகிழ் திருமேனி’ போன்ற இயக்குநர்கள் அல்லாமல், கௌதம் மேனன் அல்லது மணிரத்னம் போன்ற ஒரு இயக்குநர் இவர்களை இணைத்தால், அது நிச்சயம் ஒரு கிளாசிக் படைப்பாக இருக்கும். அஜித்தின் அந்த ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்டைலும், ஷாலினியின் அந்த எதார்த்தமான நடிப்பும் திரையில் சேரும்போது அது வெறும் நடிப்பாக இருக்காது, நிஜமான காதலின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும்.

வணிக ரீதியாகப் பார்த்தால், இந்தப் படத்திற்கு எந்தவிதமான ஆக்சன் காட்சிகளும் தேவையில்லை. அலைபாயுதே படத்திற்குப் பிறகு ஷாலினியைத் திரையில் பார்க்க ஏங்கும் ஒரு மிகப்பெரிய ஆடியன்ஸ் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்பங்கள் இந்தப் படத்தை முதல் ஆளாகப் பார்க்க வருவார்கள்.

அஜித்தின் முந்தைய ஆக்சன் படங்களை விட, இந்த ஒரு காதல் படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். இப்போதிருக்கும் இளம் தலைமுறைக்குக் கூட ‘காதல் மன்னன்’ அஜித்தையும் ‘பச்சைப் நிறமே’ ஷாலினியையும் ரொம்பவே பிடிக்கும் என்பதால், இந்தப் படம் 2K கிட்ஸையும் கவர்வது உறுதி.

யுனிக்கான ஒரு விஷயம் என்னவென்றால், அஜித்தின் சமீபத்திய படங்கள் எல்லாமே ஆக்சன் மற்றும் கிரிமினல் பின்னணியைக் கொண்டவை. இதிலிருந்து ஒரு பெரிய மாற்றமாக, ஒரு முதிர்ச்சியான காதலை (உதாரணத்திற்கு ’96’ அல்லது ‘வாரணம் ஆயிரம்’ பாணியில்) அவர் ஷாலினியுடன் சேர்ந்து நடித்தால், அது அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தால், அது 2026-ன் மிகப்பெரிய மியூசிக்கல் ஹிட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →