ஆசை நாயகன் அஜித்குமாருக்கு சினிமாவெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அவரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ்சாக இருப்பது என்னமோ கார் ரேஸ் பந்தயம் தான். வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதை இலக்காக வைத்திருக்கிறார். ஆனால் அதுவும் உறுதியாக சொல்ல முடியாது.
இப்படி போய்க்கொண்டிருக்கும் அஜித்தின் சினிமா கேரியர் இப்பொழுது ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. அதற்கு காரணம் இவர் கேட்கும் சம்பளம் தான். தயாரிப்பாளர்களை அதிர வைக்கும் அளவிற்கு ஒரு பெருந்தொகையை நடிப்பதற்கு சம்பளமாக கேட்டு வருகிறார்.
விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலுக்கு சென்றதால் இவர் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் கேட்கும் சம்பளத்தால் இப்பொழுது பிரச்சனை எழுந்துள்ளது.அஜித் ஒரு படத்தில் நடிப்பதற்கு 210 கோடியிலிருந்து 230 கோடிகள் வரை கேட்கிறார். அப்படியானால் அந்த படத்தை குறைந்தது 500 கோடிகள் பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அதற்கு எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வர மாட்டார்கள்.
சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அஜித்தின் விடாயற்சி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இவர் கேட்கும் சம்பளத்தால் வைக்கா, மைத்திரி மூவி மேக்கர்ஸ். போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் இவரை வைத்து படம் பண்ணுவதற்கு யோசிக்கிறது.
இது எல்லாம் இப்பொழுது அஜித் காதுகளுக்கு சென்றடையவே அவர் யோசிக்க ஆரம்பித்து விட்டார். சம்பள விஷயத்தில் சற்று இறங்கி வந்துள்ளார். இவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாக இருக்கிறார் ஆனால் அவரும், அஜித் கேட்ட சம்பளத்தால் யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அஜித் இந்த படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை குறைக்க உள்ளார். இதனால் இந்த படம் கூடிய விரைவில் ரெடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.