அடுத்தடுத்து குபேரா படத்திற்கு தொடர்ந்து வரும் துன்பம்.. நேரம் பார்த்து வம்பிழுக்கும் அமேசான்

ஏற்கனவே மூன்று முறை தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளிவரவிருக்கும் குபேரா படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இப்பொழுது இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக இந்த மாதம் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

குபேரா படத்தை கிட்டத்தட்ட 3 மணி நேரம் 15 நிமிடங்கள் எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் சேகர் கமுலா. இவ்வளவு நேரம் படம் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்குமா என்பதுதான் அவருக்கு நெருடலாக இருந்துள்ளது. இதற்கு முன்னர் ரஜினியின் பேட்டை படம் மூன்று மணி நேரம் ஓடியது. இந்த அதிக நேரம் தான் அந்த படத்திற்கு பாதகமாக அமைந்தது.

இதனால் சேகர் கமுலா இந்த படத்தை ட்ரீம் செய்வதற்கு தயாரிப்பாளரிடம் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் ரிலீஸ் தேதி அறிவித்து விட்டதால் இது சாத்தியமில்லை என தெரிகிறது. மறுபக்கம் அமேசான் ஓடிடி பிளாட்பார்ம் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

ஏற்கனவே மூன்று முறை இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது. அதனால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியா நிற்கிறது அமேசான். இந்த படத்தை அமேசான் 47 கோடிகள் கொடுத்து வாங்கி இருக்கிறது.

ரிலீஸ் தேதி தள்ளி போனால் அதில் பத்து கோடி குறைத்துக் கொள்ளுங்கள் என்று அமேசான் வாதிட்டு வருகிறது. இதனால் எதற்கு வம்பு என்று இப்பொழுது படம் 3 மணி நேரம் 15 நிமிடத்தோடு ரிலீசாக உள்ளது. நாகர்ஜுனா இப்பொழுது தான் இந்த படத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →