மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த அவரை சில வருடங்களாகவே கெட்ட நேரம் பிடித்து ஆட்டிவருகிறது. விக்ரம் கடைசியாக நடித்த படம் வீரதீர சூரன். இந்த படத்தில் பழைய விக்ரமை அவரது ரசிகர்கள் பார்த்து ஆனந்தப்பட்டனர். இருந்தபோதிலும் அடுத்தடுத்து அவர் செய்யும் காரியம் தான் தான் வேதனை கொடுத்து வருகிறது.
தெய்வத் திருமகள் படத்துக்கு பின்னர் இவரது கேரியர் பத்து வருடங்களாக டல்லாக தான் இருக்கிறது. ராஜபாட்டை, 10 எண்றதுக்குள்ள, மகான், கோப்ரா, என அடுத்தடுத்து பல படங்கள் ப்ளாப்பானது. பொன்னியின் செல்வன், தங்கலான் என மீட்டெடுத்த போதிலும் பிரயோஜனமில்லை.
நடிப்பில் எந்த குறையும் வைக்காமல் இவரது வேலையை அட்டகாசமாக முடித்துவிடுவார். ஆனால் மற்ற விஷயங்கள் சொதப்பி மொத்த படத்தையும் கெடுத்துவிடும். இப்படி இவர் மோசம் போன படங்கள் ஏராளம். கடைசியாக வீரதீர சூரன் சொல்லும்படி இருந்தது.
இந்த படத்திற்கு அப்புறம் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் ஒரு படம் நடிப்பதாக இருந்தார் ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது. கதை விஷயத்தில் விக்ரம் நிறைய எதிர்பார்க்கிறார் என்ற தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அடுத்த படமும் ட்ராப்பாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுவதாக இருந்தார். ஆனால் இப்பொழுது அதற்கும் வந்துவிட்டது ஆப்பு. விக்ரம் நான் ஒரு மாஸ் ஹீரோ எனக்கு இப்படித்தான் கதை இருக்க வேண்டும். என் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள் என கண்டதை பேசி வருகிறாராம்.