தனுஷ் தன்னுடைய அடுத்த படம் வெற்றியடைய வேண்டும் என்று மிகவும் கவனமாக இருக்கின்றார். இதற்கு காரணம் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு திரைப்படங்கள் அமையவில்லை.
OTT தளங்களில் வெளியான ‘ஜகமே தந்திரம்’, ‘அட்ராங்கி ரே’, ‘மாறன்’ திரைப்படங்கள் அந்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. தனுஷின் ஹாலிவுட் படமான ‘கிரே மேன்’ ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு தனுஷுக்கு காட்சிகள் இல்லாததால் ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை.
சொல்லப்போனால் தனுஷிற்கு ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து வெற்றி கதைகள் அமையவில்லை. இதனாலேயே தனுஷ் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிக்க ரொம்ப பயந்து இருக்கிறார். கதையை கேட்டதும் தனுஷ் முதலில் வெற்றிமாறனுக்கு தான் போன் செய்து இருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் கதையை கேட்கவில்லையாம்.
கதையை சொல்ல முயற்சி செய்த தனுஷ் சொல்ல முடியாமல் அந்த படத்தில் அவருடன் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட வெற்றிமாறன் கதையை கூட கேட்காமல் உடனே ஓகே சொல்லி விட்டாராம்.
இதற்கு காரணம், தனுஷ் , பாரதிராஜா , பிரகாஷ் ராஜ் மூவரும் வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்தவர்கள் எனவே கதைக்களம் வித்தியாசமானதாக இருக்கும், மேலும் இந்த மூவருமே நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை இதையெல்லாம் மனதில் வைத்து கொண்டு தான் வெற்றிமாறன் ஒகே சொல்லி இருக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது, அந்த விழாவில் தனுஷிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த விழா மேடை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான விவாகரத்திற்கு பிறகு தனுஷ் ஏறிய முதல் தமிழ் மேடையும் கூட.