Dhanush: சென்சேஷனல் நடிகை ஒருவரை சீக்ரெட்டாக ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து கொண்டிருக்கிறாராம் நம் நடிப்பு அரக்கன் தனுஷ். சூப்பர் ஸ்டார் மக்களுடன் திருமணம், பல டாப் நடிகைகளுடன் கிசு கிசு என தனுஷ் எப்போது கோலிவுட்டில் ஹாட் டாக் தான்.
கணவனாக எப்படி இருந்தார் என்பதெல்லாம் பெர்சனலாக இருந்தாலும், 2 மகன்களுக்கு சிறந்த அப்பா. நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் தனுஷ், தென்னிந்திய சினிமா ரசிகர்களை கடுப்பேத்தும் அளவுக்கு சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருகிறார்.
ஆதாரத்தை வைரலாக்கும் நெட்டிசன்கள்!
தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாவிட்டாலும் சீதாராமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் உச்சம் தொட்டார். தெலுங்கு மற்றும் இந்தி சினிமா உலகில் படு பிசியாக இருக்கும் இவர் எப்போது தமிழில் இறக்குமதி ஆவார் என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இவர் தமிழகத்தின் மருமகளாகவே ஆகிவிடுவார் போல.
சமீபத்தில் மிருணாள் தாகூர் நடித்த சன் ஆஃப் சர்தார் படத்தின் சிறப்பு காட்சியை காண தனுஷ் வந்திருந்தார். அப்போது இருவரும் கையை பிடித்து பேசி கொண்டிருந்த வீடியோ வைரலானது. அதே மாதிரி தனுஷ் நடித்து கொண்டிருக்கும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் நிறைவு விழாவில் மிருணாள் தாகூர் கலந்து கொண்டிருந்திருக்கிறார்.
42 வயதாகும் தனுஷ், 33 வயதாகும் மிருணாள் தாகூரை டேட்டிங் செய்வது பாலிவுட்டில் மிகப்பெரிய சென்சேஷனல் செய்தியாகி கொண்டிருக்கிறது. இருவரும் இந்த காதலை மறைக்க விரும்பவில்லை என்றும், எல்லாமே மெதுவாக, இயல்பாக நடக்க வேண்டும் என விரும்புகிறார்கள் என்றும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

தனுஷ் தற்போது பக்குவட்ட மனிதராக இருக்கிறார், பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக தனுஷ்- ஐஸ்வர்யா இருந்து வருகிறார்கள். இதனால் மிருணாள் தாகூரை தனுஷ் டேட்டிங் செய்கிறார் என்பதெல்லாம் வழக்கமான வதந்தி தான், சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் சாரா அலிகானுடன் நெருங்கி பழகுவதாக செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.