6 ஆண்டுகள் கழித்து கம்பேக்.. சின்மயிக்கு வாய்ப்பளித்த பிரபல இசையமைப்பாளர்

Chinmayi : சின்மயி சமீபத்தில் மணிரத்னத்தின் தக் லைஃப் பட விழாவில் மூத்த மழை பாடல் பாடியிருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ஆல்பத்திலும் சின்மயி குரலில் ஒளித்த பாடலை சேர்த்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது Mee Too விவகாரத்தில் சின்மயி புகார் அளித்திருந்தார். இதன் காரணமாக டப்பிங் யூனியன் மற்றும் படங்களில் பாடல் பாடுவதற்கு சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் படங்களில் பாடாமல் ஒதுங்கி இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருந்தது. இதில் த்ரிஷாவுக்கு சின்மயி தான் டப்பிங் கொடுத்திருந்தார். தடையை மீறி சின்மயி இதில் டப்பிங் கொடுத்ததற்கு பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.

ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் பாடிய சின்மயி

இதை அடுத்து தான் முத்தமழை பாடல் ட்ரெண்டான சமயத்தில் இசையமைப்பாளர்கள் சின்மயிக்கு வாய்ப்பு தருவதாக கூறி வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே டி இமான் இசையில் சின்மயி பாடியுள்ள நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

கே எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் சினேகன் பாடல் வரிகளில் சின்மயி குரல் கொடுத்து இருக்கிறார். டி இமான் தனது சமூக வலைதள பக்கத்தில் சின்மயுடன் புகைப்படம் எடுத்ததை வெளியிட்டு இந்த மகிழ்ச்சியை பதிவிட்டு இருக்கிறார்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்மயி கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த பாடலுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் விஜய் ஆண்டனியும் சின்மயிக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →