கூலி முதல் பாதி பார்த்துவிட்டு ரஜினிக்குரிய ஒத்த வார்த்தை.. LCU-வில் சிக்காத தனி காட்டு ராஜா

லோகேஷ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளிவர உள்ள கூலி படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, உபேந்திரா பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ அமீர்கான் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் அமீர்கான் கொடுத்த பேட்டியில் லோகேஷ் திறமையான இயக்குனர் கூலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும். இது முடிந்த பின் லோகேஷ் உடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாகவும் அடுத்த வருடம் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கம் என உறுதி அளித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 171வது படமான கூலி, தங்கக் கடத்தலைப் பற்றியது. சுவாரஸ்யமான கதைக்களத்தில் லோகேஷ் கூலி ஒரு தனிப் படமாக இருக்கும் என்றும், அவரது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக இருக்காது என்றும் தெரிவித்தார். இதுவே ரஜினி சொன்ன முதல் கட்டளை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

38 வருடங்கள் கழித்து ரஜினியுடன் சத்தியராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளார். அது இன்னும் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட நட்சத்திரங்களைத் தவிர, இந்தப் படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான் மற்றும் ஜூனியர் எம்ஜிஆர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கூலி படத்தின் முதல் பாதியை ரஜினிக்கு போட்டு காமித்துள்ளார் லோகேஷ், அதை பார்த்துவிட்டு ரஜினி ஒத்த வார்த்தையில் படம் பிரமாதமா வந்திருக்கு கண்ணா, கண்டிப்பா ஹிட் கொடுக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்.

அனிருத்தின் பிரம்மாண்ட இசை, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் என தரமான டீம் கூலி படத்திற்காக இரவு பகலாக உழைத்து உள்ளனர். இந்த படத்திற்காக கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →