பட வாய்ப்பு இல்லாமலேயே மாதம் 4 லட்சம் வருமானம்.. கிரண் ரூட்டை கையில் எடுத்த தர்ஷா

Darsha Gupta: தர்ஷா, விஜய் டிவியின் ‘Cook With Comali’, ‘செந்தூரப்பூவே’ சீரியல் மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவர். ஆனால், இவருக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. மீடியா அலைமோதாத போதிலும், தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் வருமானம் சம்பாதித்து வருகிறார்.

புது ரூட்டை கையில் எடுத்த தர்ஷா

தற்போது, தர்ஷா தன்னுடைய Instagram page-ல் ஒரு சப்ஸ்கிரிப்ஷன் (Subscription) திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த திட்டத்தில், சுமார் 800-க்கும் மேற்பட்ட பேர் இணைந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் மாதத்திற்கு ₹400 சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். அந்த சந்தாவை செலுத்தும் ரசிகர்களுக்காக, தர்ஷா ஸ்பெஷல் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார்.

இதன் மூலம், தர்ஷாவுக்கு மாதம் கணக்கீட்டில் சுமார் ₹4 லட்சம் வரை வருமானம் வந்து சேருகிறது. அதாவது, ஒரு சீரியலில் நடிக்கும் சம்பளத்தை விட அதிகமான வருமானம் சமூக வலைத்தளம் மூலமே குவித்து வருகிறார்.

இது முன்பாக, கிரண் ரத்தோட் போன்ற சில நடிகைகள் வீடியோ கால்கள் மற்றும் கவர்ச்சியான போட்டோக்கள் மூலம் வருமானம் ஈட்டியதாக செய்திகள் வந்தது. தற்போது அதே வழியில், தர்ஷா குப்தா தனது ரசிகர்களை நேரடியாக கனெக்ட் செய்து வருகிறார் என்று சொல்லலாம்.