பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ்.. சுவாரஸ்யமான கதையுடன் குபேரா

Danush : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய “குபேரா” படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என 3 மொழிகளில் வெளியாகவுள்ளது.

மும்பையில் ஒரு பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது “குபேரா” படத்தின் ட்ரெய்லர். தனுஷ் படத்தில் பிச்சைக்காரனாக இருந்து கோடீஸ்வரனாக மாறுகிறார். நாகர்ஜுனா ஒரு பலம் படைத்த போலீசாகவும், ராஷ்மிகா மந்தனா – தனுஷுக்கு ஜோடியாக கண்ணில் கவரும் தோற்றத்துடன் நடித்துள்ளார்.

“குபேரா” ட்ரெய்லர் வெளியிட்டதிலிருந்து ரசிகர்கள் மீம், ரீல்ஸ், சாட்ஸ் என மாஸ் கிளப்பி வருகின்றனர். தனுஷின் டயலாக் டெலிவரி, அவரது மேக்கோவர், ஹீரோயின் ராஷ்மிகாவுடன் செம்ம கேமிஸ்ட்ரி என பதிவிட்டு வருகின்றன

இசையிலும் ஒரு மேஜிக்!

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் சாங்ஸ் மட்டும் இல்லாமல் பி.ஜி.எம்-இலும் goosebumps தரக்கூடிய பீல் இருக்கும் என கூறப்படுகிறது.

முதல் திட்டமிட்ட ரிலீஸ் தேதி ஏப்ரல் 10 என இருந்தபோதிலும், படத்திற்கான VFX, இசை, மற்றும் படத்தொகுப்பு வேலைகளை இன்னும் பிரமாண்டமாக்க வேண்டும் என்பதற்காக, படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது. தற்போது அக்டோபர் 1-ஆம் தேதி புதிய வெளியீட்டு தேதியாக அறிவித்துள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →