வளர்த்த கிடா மார்பிலேயே குத்திய தனுஷ்.. உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா ‘D’ சார்?

Dhanush: வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது என்று சொல்வார்கள். ஆனால் வளர்த்துவிட மார்பிலேயே பாய்ந்த கதையாக தனுஷ் ஒரு சம்பவத்தை பண்ணியிருக்கிறார்.

தனுஷுக்கு நெருக்கமானவர்கள் என்று, ஆரம்ப காலகட்டத்தில் அவர் வளர்த்து விட்டவர்கள், அவரை வளர்த்து விட்டவர்கள் என ஒரு வட்டாரம் இருக்கிறது.

அதில் ரொம்ப முக்கியமானவர் வெற்றிமாறன். தனுஷுக்கு பேர் சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி படம் எல்லாமே வெற்றிமாறன் இயக்கியதுதான். இவர்களது கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த படம் என்றால் அது வடசென்னை.

அலைக்கழித்த தனுஷ்

இந்த படத்தின் கதையை தனுஷிடம் சொல்லி அவர் ஓகே பண்ணிய பிறகு பல மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இதனால் வெறுத்துப் போன வெற்றிமாறன் இந்த கதையோடு சிம்புவை சந்தித்திருக்கிறார்.

சிம்பு உடனே படத்துக்கு ஓகே சொல்லி இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட தனுஷ் உடனே வெற்றிமாறனுக்கு போன் பண்ணி வடசென்னை படப்பிடிப்பை உடனே ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

நட்பின் காரணமாக தனுஷை வைத்து வட சென்னை படத்தை வெற்றிமாறன் தொடங்கி இருக்கிறார். ஆனால் அவர் மீது இருந்த கோபத்தால் தனுஷ் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராமல் வெற்றிமாறனை ரொம்பவே அலைக்கழித்து விட்டாராம்.

இப்படி ஒரு செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. தனுசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் வடசென்னை படத்தில் தயாரிப்பாளரே அவர் தான்.

அப்படி இருக்கும் போது லேட்டாக வந்தால் அவருக்குத்தான் நஷ்டம். எதற்காக தனுஷ் மீது இப்படி பொய் பரப்புரை வருகிறது என கடிந்து கொண்டிருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →