தனுஷ் தானே என்னைப் பற்றி தவறாக பேச பணம் கொடுத்தார்.. மீண்டும் பயில்வானை வெளுத்து வாங்கிய நடிகை

என்னிடமும் பல முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் உள்ளது என பிரபல பாடகி சுசித்ரா, பயில்வானிடம் பேரம் பேசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் நடிகர் மற்றும் பத்திரிகையாளரான பயில்வான், பிரபல திரைப்பட பாடகி சுசித்ராவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதனால் தான் அவரது கணவர் விவாகரத்து பெற்றார் என்றும் பல விஷயங்களை சமூக வலைத்தளத்தில் பேசி பகிர்ந்திருந்தார்.

இதனிடையே அந்த வீடியோவை பார்த்து காண்டான சுசித்ரா, பயில்வானுக்கு போன் செய்து நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுறீங்களே, என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என சரமாரியாக வெளுத்து வாங்கினார். மேலும் போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும், அவர் தெரிவித்திருந்த ஆடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது.

இதனிடையே தற்போது மீண்டும் பயில்வானை போனில் அழைத்து பேசிய சுசித்ரா,என்னை பற்றி பேச தனுஷ் தானே உங்களுக்கு பணம் கொடுத்தார் என்று கேட்டுள்ளார். அதற்கு பயில்வான், உங்கள் முன்னாள் கணவன் கார்த்திக் தான் உங்களை பற்றி பத்திரிகையில் தெரிவித்திருந்தார் அதை பார்த்து தான், நான் பேசினேன் என தெரிவித்தார்

மேலும் பேசிய சுசித்ரா, தன்னிடம் பிரபல நடிகைகளான திரிஷா,தமன்னா,ஹன்சிகா உள்ளிட்டோரின் பார்ட்டி வீடியோக்கள் உள்ளது, அதை நான் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன். நீங்கள் அவர்களைப் பற்றியும் பேசுங்கள். அப்போது, என்னைப் பற்றி யார் பேச சொன்னார்கள் என்ற உண்மை வெளியில் வரும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், நீங்கள் இதனை வெளியிடவில்லை என்றால் நான் எனது சுச்சி லீக்ஸ் வலைத்தளம் மூலமாக வெளியிட்டு விடுவேன் எனவும் சுசித்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தற்போது பேட்டியில் பேசிய பயில்வான், தனக்கு பிரபல நடிகைகளின் பார்ட்டி வீடியோக்களை சுசித்ரா அனுப்பிய போது தான் அதை டெலிட் செய்து விட்டதாகவும் அதனை பொருட்டாக எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →