பேரன்பு கூட்டணியின் புதிய அப்டேட்.. மீண்டும் ஒரு ஃபீல் குட் படம் பார்க்க தயாரா?

Mammooty: தென்னிந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் பேரன்பு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மம்மூட்டி இயக்குனர் ராம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்று கொடுத்தார்.

இத்தனை வருட காத்திருப்புக்கு கை மேல் பலனாக இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

குறைபாடு இருக்கும் குழந்தை, தனிப்பட்ட காரணங்களால் குழந்தையை விட்டுச் செல்லும் மனைவி, என்னதான் உடல் குறைபாடு இருந்தாலும் தன் வயதுக்கு ஏற்ற எல்லா உணர்வும் அந்த குழந்தைக்கு வர ஆரம்பிக்கிறது.

பேரன்பு கூட்டணியின் புதிய அப்டேட்

இதை ஒரு தந்தையாக மம்முட்டி எப்படி கையாளுகிறார் என்பதுதான் படத்தின் அழகான கதை. இப்படி தென்னிந்திய சினிமா முழுக்க கொண்டாடிய இந்த பட கூட்டணி மீண்டும் இணைந்தால் நமக்கு கொண்டாட்டம் தானே.

இயக்குனர் ராம் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தமிழ் சினிமா பற்றி பல விஷயங்களை பேசி அவர் மீண்டும் மம்முட்டியுடன் இணைவது பற்றி சொல்லி இருந்தார்.

மம்மூட்டி, ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் விரைவில் பேரன்பு கூட்டணி இணையும் என்றும் சொல்லி இருக்கிறார். மீண்டும் மனதுக்கு இதமான ஒரு படத்தை பார்க்க நாமும் தயாராக வேண்டி தான்.