1980-களில் முதல் மூன்று படங்களிலேயே சாதனை.. ரஜினி கமலுக்கு டப் கொடுத்த ஹீரோ

தமிழ் சினிமாவில் இன்றைய சூழ்நிலையில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் 25 நாள் ஓடினாலே  அதற்கு  ‘வெற்றி விழா’ கொண்டாடும் நிலை உள்ளது. ஆனால் 1980களில் பல படங்கள் 100 நாட்கள், 200 நாட்கள் என சாதாரணமாக ஓடியது என்றே சொல்லலாம். 

சில படங்கள் அதையும் தாண்டி 300 நாட்கள் ஓடின. அந்தச் சாதனையை தனது முதல் மூன்று வருடங்களிலேயே படைத்தவர் ரசிகர்கள் “மைக் மோகன்” என்று அழைக்கும் நடிகர் மோகன். அவரை பற்றி தான் பார்க்க போகிறோம்

மோகன் தனது ஹீரோவாக ஆரம்ப காலத்திலேயே மூன்று படங்களை தொடர்ந்து 300 நாட்கள் ஓடச் செய்து சாதனை படைத்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை இந்த மூன்று படங்களும் மோகனின் ஆரம்ப கேரியரில் வெற்றிக்கொடி நாட்டிய படங்கள். குறிப்பாக ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் மோகனுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் ஃபேர் விருது பெற்றுத் தந்தது.மேலும் அவர் பெற்ற ஒரே பெரிய விருதும் இதுவே எனவும் குறிப்பிடத்தக்கது.

1980களின் பெண்கள் மனதை கொள்ளை கொண்ட ஹீரோ

1980களில் மோகன், பெண்களின் கனவுக் கண்ணனாக விளங்கினார். அவரது மென்மையான முகபாவங்கள், இனிமையான காதல் நடிப்பு மற்றும் இசை இயக்குனர் இளையராஜாவுடன் சேர்ந்த காதல் பாடல்கள் ரசிகர்களை மயக்கியதால் அவர் “கோகிலா மோகன்”, “மைக் மோகன்”, “வெள்ளி விழா நாயகன்” போன்ற பட்டங்களை பெற்றார்.

ஒரே ஆண்டில் 19 படங்கள் – அசாதாரண உழைப்பு

மோகன் ஒரே ஆண்டில் 19 படங்களில் நடித்தார் என்பது ஆச்சரியமான விஷயம். தினமும் 18 மணி நேரம் பணியாற்றிய அவர், ஒரே நாளில் 3 படங்கள் வெளியான சம்பவத்தையும் கண்டுள்ளார். அந்த மூன்று படங்களும் வெற்றி பெற்றது அவரது கேரியர் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறது.

இன்று ஒரு படம் 50 நாட்கள் ஓடுவது கூட கடினம். ஆனால் 1980களில் மோகன் போன்ற நடிகர்கள், கதையம்சம் இசையும் நிரம்பிய படங்கள் மூலம் ரசிகர்களை 300 நாட்கள் தியேட்டருக்கு இழுத்துச் சென்றனர் என்று கூறலாம். 

இன்றும் பழைய பாடல்கள், பழைய காதல் கதைகளை விரும்பும் ரசிகர்களிடையே மோகனின் பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது. “100 நாள் படம்” என்பது வெற்றியின் அடையாளமாக இருந்த காலத்தில், 300 நாள் சாதனை செய்த ஹீரோவாக மோகன் என்றும் ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நிலைத்திருப்பார்.