முதல் படத்திலேயே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்

2023 Best Debutant Directors:இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நிறைய நல்ல கதைகளை கொண்ட படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் வரவேற்பை அதிகமாக பெற்றிருக்கின்றன. அதிலும் இந்த ஐந்து புதுமுக இயக்குனர்கள் இயக்கிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த ஆண்டிற்கான சிறந்த புதுமுக இயக்குனர்களாகவும் இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். லோ பட்ஜெட்டில் படங்களை எடுத்து மெகா ஹிட் ஆக வசூலை வாரி குவித்திருக்கிறார்கள்.

தரணி ராஜேந்தர்: இயக்குனர் தரணி ராஜேந்தர் இயக்கிய திரைப்படம் தான் யாத்திசை. லோ பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சேர மற்றும் சோழ அரசர்களை கொன்று, சோழ நாட்டில் ஆட்சி செய்யும் பாண்டிய மன்னனை சுற்றி நடக்கும் கதைக்களம் தான் இந்த படம். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

விக்னேஷ் ராஜா: நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோரே முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் தான் போர் தொழில். நொடிக்கு நொடி திரில்லர் அனுபவத்தை கொடுக்கும் இந்த படம் பெண்களை மையப்படுத்திய சீரியல் கொலைகளை சுற்றி நடக்கும் விசாரணையை திரைக்கதையாகக் கொண்டது. இந்த படம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் என்று கூட சொல்லலாம்.

மந்திர மூர்த்தி: இயக்குனர் மந்திரமூர்த்தி நடிகர் சசிகுமாரை வைத்து இயக்கிய திரைப்படம் தான் அயோத்தி. மனிதத்தின் மீதும், மனிதாபிமானத்தின் மீதும் அதிக நம்பிக்கையை உருவாக்கும் கதைக்களத்தை இந்த படம் கொண்டது. ரொம்பவும் எதார்த்தமான கதை காட்சிகளுடன் உருவான இந்த படம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

விநாயக் சந்திரசேகர்: இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கிய திரைப்படம் தான் குட் நைட். இந்த படத்தில் ஜெய் பீம் பட நடிகர் மணிகண்டன் நடித்திருந்தார். சாதாரண ஒரு குறட்டையை வைத்து இரண்டரை மணி நேரம் சலிப்பு தட்டாத அளவுக்கு கதை சொல்லி இருந்தார் இயக்குனர். நடிகர் மணிகண்டனும் தன்னுடைய சிறந்த நடிப்பை இதில் வெளிப்படுத்தி இருந்தார்.

கணேஷ் பாபு: நடிகர் கவினுக்கு அவருடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் டாடா. இந்த படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் கணேஷ் பாபு. பல வருடங்களாக சினிமாவில் ஜெயிப்பதற்காக காத்துக் கிடந்த கவினுக்கு இந்த படம் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்தது. உலக நாயகன் கமலஹாசன் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →