2023ல் நல்ல கதை இருந்தும் மக்களிடம் சேராத 5 படங்கள்..

2023 failed movies with good story: 2023 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடைவதால், இந்த வருடத்தில் வெளியான நல்ல கதை கரு கொண்ட 5 படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படாமல் படு தோல்வி அடைந்தது. இந்த படங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் வன்முறையை அதிகம் பேசக்கூடிய படங்களை தான் திரையரங்கில் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் உச்சகட்ட சோகம்.

பொம்மை நாயகி: காமெடியனாக ரசிகர்களை சிரிக்க வைத்த யோகி பாபு கதாநாயகனாக நடித்த படம் தான் பொம்மை நாயகி. இந்தப் படத்தில் யோகி பாபுவின் சென்டிமென்ட் ஆன நடிப்பை பார்க்க முடிந்தது. ஷாம் இயக்கத்தில் நீலம் ப்ரொடக்சன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ‘பாரதமாதா’ என பெண்கள் பெயரால் போற்றப்படும் இந்த பாரத நாட்டில், தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலைமை என்ன என்பதை இந்த படம் அப்பட்டமாக சொல்கிறது. அதிலும் இதில் அப்பா தன்னுடைய மகளுக்கு நேர்ந்த அநீதியை எப்படி தட்டி கேட்கிறார் என்பதை மையமாகக் கொண்டு படத்தை எடுத்தனர். நல்ல கருத்துக்களை சொன்ன இந்தப் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு தான் ஆளில்லாமல் போச்சு.

லக்கி மேன்: காமன் மேனுக்கும், கராரான போலீஸ் மேனுக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்த லக்கி மேன் படத்தின் கதை கரு. ரொம்ப சிம்பிளான காமெடி கதை என்றாலும் யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. இந்த படத்தில் தனக்கு அதிர்ஷ்டத்தை அளித்த காரையும், இழந்த தன் அதிர்ஷ்டத்தையும் யோகி பாபு எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை கிளைமாக்ஸில் உருக்குத்துடன் காட்டினார். ஆனால் நல்ல கதையம்சம் கொண்ட இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களால் கொண்டாட முடியாமல் போனது தான் சோகம்.

கிடா: சில தினங்களுக்கு முன்பு ரா வெங்கட் இயக்கத்தில் காளி வெங்கட், பூ ராமு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிடா படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களின் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படத்தில், தாத்தா தீபாவளிக்கு தன் பேரனுக்கு புது துணியை வாங்கித் தர முடியவில்லை என்ற சோகத்தில், வீட்டில் செல்லமாக வளர்த்த கிடாயை விற்பதற்கு முயற்சி செய்கிறார். பின்பு அந்த கிடா காணாமல் போகிறது. கடைசியில் கிடா கிடைக்கிறதா? பேரனுக்கு தாத்தா துணி வாங்கி கொடுத்தாரா? என பல உணர்ச்சிப்பூர்வ காட்சிகளை இந்த படத்தில் காட்டினர்.

யாத்திசை: ஏழாம் நூற்றாண்டில் சேர, சோழ அரசர்களை வென்று சோழ நாட்டிற்கு வந்து ஆட்சி செய்தனர் பாண்டியர்கள். ஆனால் பாண்டியர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் எயினர் எனும் பழங்குடிகள் குழுவும் ஒன்று. பாண்டியர்களின் வெற்றிக்குப் பிறகு பாலை நில நாடோடி வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட அக்குழுவினருக்கு அரசு அதிகாரத்தை கைப்பற்ற கிளம்பிய கொதி என்னும் மாவீரனின் வீரப் போராட்டத்தை இந்த படத்தில் காட்டினர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு, யாத்திசையை கொண்டாட மனசில்லை. இதனால் இந்த படம் நல்ல கதை களத்தில் சிறப்பான படைப்பாக வெளிவந்தாலும் மக்களிடம் போய் சேரவில்லை.

நூடுல்ஸ்: அருவி புகழ் மதன் இயக்கத்தில் வெளியான படம் தான் நூடுல்ஸ். இந்தப் படத்தில் ஹரிஷ் உத்தமன் ஷீலா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம், ஒரு எளிமையான கதையை வைத்துக்கொண்டு சுவாரசியமான திரை கதையை அமைத்து ரசிக்க வைத்தனர். இந்த படத்தில் போலீஸ் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை மதன் தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேரம் கூடுதல் சுவாரசியமாக இருந்தது. இரண்டு நிமிடங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை மாறவும் முடியும், எல்லா பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நல்ல கதை கரு கொண்ட இந்த படம், மக்களிடம் போய் சேராமல் போனது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →