மாமனார், மருமகனுடன் கூச்சமே இல்லாமல் ஜோடி போட்ட 4 நடிகைகள்

Actresses Paired With Both Rajini And Dhanush: ஹீரோயின்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்கள். அவ்வாறு தனுஷ் உடன் ஜோடி போட்ட சில நடிகைகள் ரஜினியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அவ்வாறு மாமனார் மற்றும் மருமகனுடன் ஜோடி போட்ட நான்கு நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரேயா : தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் தனுஷின் மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நயன்தாரா : தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் ஹோம்லி பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நயன்தாரா. இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் நயன்தாரா நடித்திருப்பார். இவ்வாறு மாமனார் மற்றும் மருமகன் இருவருடனும் நயன்தாரா ஜோடி போட்டிருக்கிறார்.

திரிஷா : தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த வெளியான திரைப்படம் கொடி. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும், வில்லியாகவும் மிரட்டி இருப்பார் நடிகை திரிஷா. இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் இருந்து வரும் திரிஷாவுக்கு பேட்டை படத்தில் தான் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமன்னா : தனுஷ் உடன் இணைந்த தமன்னா படிக்காதவன், வேங்கை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் தற்போது நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னாவும் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான காவாலா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் தமன்னா.

மேலும் தனுஷின் தொடரி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் ஜோடி போடாமல் தங்கையாக நடித்து இருந்தார். மேலும் இந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் தவிர மற்ற நடிகைகள் எல்லோருமே ரஜினியுடன் ஜோடி போட்டும் மற்றும் ஒரே பாடலிலும் நடனம் ஆடி இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →