4 அழகிய நடிகைகளின் சோலியை முடித்துவிட்ட ஜெய்.. எல்லாம் காதல் படுத்தும் பாடு

Actor Jai: நடிகர் ஜெய் பொருத்தவரைக்கும் சினிமாவுக்கு அவருக்கும் தான் செட்டாகவில்லை என்று பார்த்தால், அவருடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் அவருக்குமே செட்டாகவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து கொண்டிருந்த ஜெய் திடீரென வாய்ப்பு இல்லாமல் காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் அவர் நடித்த படங்களும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. படங்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் அவருடன் இணைந்து நடித்த நடிகைகளின் சினிமா கேரியரே ஊத்தி மூடும் அளவுக்கு போய்விட்டது.

ஜெய் சோலியை முடித்துவிட்ட ஹீரோயின்கள்

அஞ்சலி: தொடர்ந்து நிறைய நல்ல படங்களை கொடுத்து முன்னணி இடத்தில் இருந்தார் நடிகை அஞ்சலி. ஜெய் மற்றும் அஞ்சலி இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் ப்ரோமோஷன் சமயத்திலேயே ஜெய், அஞ்சலியை காதலிப்பதாக மறைமுகமாக நிறைய பிரமோஷன் விழாக்களின் போது பேசி இருந்தார். இதனால் தான் என்னவோ இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு உள்ளேயே நடிகை அஞ்சலி பல பிரச்சனைகளை சந்தித்து, சினிமாவில் இருந்து மொத்தமாக ஒதுங்கி எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் பல வருடங்கள் இருந்தார்.

வாணி போஜன்: சின்னத்திரை நயன்தாரா என ஒரு காலத்தில் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் தான் வாணி போஜன். இப்போது இவர் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனதற்கு காரணம் நடிகர் ஜெய் தான். வாணி மற்றும் ஜெய் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் வெப் தொடரில் நடித்தார்கள். இந்த சமயத்தில் இருவரும் காதலித்ததாகவும், தற்போது லிவிங் டு கெதரில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானதால் வாணியின் பட வாய்ப்புகள் அப்படியே சரிந்து விட்டன.

சுவாதி: நடிகை சுவாதிக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. சுப்ரமணியபுரம் படத்தில் இவர் ஜெய் உடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. இதை தொடர்ந்து சுவாதிக்கு பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. மீண்டும் சில வருடங்கள் கழித்து ஜெய் தன்னுடைய வடகறி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இருந்தாலும் ஸ்வாதியால் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போனதற்கு ஜெய் உடன் ஏற்பட்ட காதல் சர்ச்சை தான் காரணம்.

விஜயலக்ஷ்மி: ஜெய் மற்றும் விஜயலட்சுமி இருவருமே இணைந்து சென்னை 28 படத்தில் நடித்திருப்பார்கள். அந்த படத்தில் ஜெய் விஜிக்கு ஜோடி இல்லை என்றாலும் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது அதைத் தொடர்ந்து ஜெய்க்கு ஜோடியாக விஜயலட்சுமி அதே நேரம் அதே இடம் என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே ரொம்பவும் நெருக்கமான காட்சிகள் நிறைய இடம்பெற்றிருந்தன. இதை தொடர்ந்து விஜயலட்சுமிக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் அவர் திருமணம் செய்து கொண்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →