ஹீரோ அவதாரத்தை கைவிட்ட 4 காமெடி நடிகர்கள்.. மீண்டும் பழைய ரூட்டிற்கே திரும்பிய பரிதாபம்

சினிமா துறையை பொறுத்தவரையிலும் அனுபவம் வாய்ந்த ஹீரோக்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். சினிமா ஒருவரை எந்த அளவிற்கு உச்சாணிக்கொம்பிற்கு தூக்கி செல்கிறதோ அதே அளவு காலை வாரியும் விடும். ரசிகர்கள் திரையில் எந்த அளவிற்கு ஒரு சிலரை காமெடி நடிகர்களாக புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றார்களோ அதே அளவிற்கு அவர்களை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் ஹீரோ அவதாரத்தை கைவிட்ட 4 காமெடி நடிகர்கள்.

வடிவேலு: வைகைப் புயல் வடிவேலு நகைச்சுவைகளின் அரசனாக இருந்து வந்த நிலையில் 23ம் புலிகேசி என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவருக்கு இந்த ஒரு படத்தினை தவிர ஒரு படம் கூட வெற்றி படமாக அமையவில்லை. தற்பொழுது இவர் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் காமெடியில் மட்டுமே தற்பொழுது கவனத்தை செலுத்தி வருகிறார்.

சந்தானம்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலமும் சந்தானம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி இதன் இரண்டாம் பகுதியும் வெளிவந்தது. சந்தானத்திற்கு தொடர்ந்து தோல்வி படங்களாக அமைவதால் மீண்டும் காமெடிக்கு திரும்பியுள்ளார்.

சதீஷ்: சதீஷ் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம்பிடித்து சதீஷ் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தனர். மற்ற நடிகர்கள் போல் தானும் பெரிய ஹீரோவாக வருவேன் என்ற எண்ணத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறாமல் மண்ணைக் கவியது. இதனால் தனது ரூட்டை பழைய நிலைக்கு மாற்றி உள்ளார்.

சூரி: சிவகார்த்திகேயனுடன் காமெடிகளில் பட்டையை கிளப்பிய சூரி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். விடுதலை என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்க சென்றார். மற்ற படங்களின் வாய்ப்புகளை நழுவ விட்டார். இதனால் விட்ட இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் காமெடிகளில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஆனால் தற்பொழுது இவர்கள் 4 பேருமே ஹீரோக்களாக நடித்து வந்த நிலையில் தங்களது ரூட்டை மாற்றி நாங்கள் காமெடியன்களாகவே இருந்து விடுகிறோம் என்று தீர்மானம் எடுத்து விட்டனர். இனி திரையில் இவர்கள் காமெடி நட்சத்திரங்களாக மட்டுமே ஜொலிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →