60 வயதைக் கடந்தும் இசையில் கலக்கும் 4 இசையமைப்பாளர்கள்.. என்றும் இளமையான ராஜா

Music Directors: எப்பொழுதுமே கடந்து வந்த பாதை பொக்கிஷமான ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுக்கும். அப்படித்தான் தற்போது வரை அந்த காலத்தில் உள்ள பாடல்கள் மாதிரி வருமா என்று சொல்லும் அளவிற்கு இசையால் ஒவ்வொருவருடைய கவலைகளையும் போக்கியிருக்கிறது. அதிலும் சில இசையமைப்பாளர்கள் எந்த காலத்திலும் மறக்க முடியாது என்பதற்கு ஏற்ப 60 வயதை கடந்த நிலையிலும் கலக்கிக் கொண்டு வருகிறார்கள்.

முக்கியமாக என்றுமே இளமை துள்ளலுடன் இசையை வாரி கொடுப்பதில் ஞானியாக வரும் இசைஞானி இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காதவர்களை இல்லை. சோகம், சந்தோசம், காதல் போன்ற ஒவ்வொரு உணர்வுக்கும் இவருடைய இசை தான் அவர்களுக்கு ஒரு மருந்தாக இருந்திருக்கிறது.

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவர் இசையமைத்த காலம் தான் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பயணித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியும் “வழிநிடுக காட்டு மல்லி” என்ற பாடலை கொடுத்து அனைவரையும் கிரங்கடிக்க வைத்து விட்டார்.

இவரை போலவே இசையமைப்பாளர் ஜேசுதாஸ் காதலில் விழுந்த அனைவருக்கும் இவருடைய குரல் தான் மருந்து என்ற சொல்லும் அளவிற்கு இனிமையான அர்ப்பணிப்பை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் கே பாலச்சந்திரரால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி.

இவர் தமிழில் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மரகதமணி என்றே சொல்லலாம். இன்னும் வரை இவர் பாடிய ஒரு பாடலை மறக்கவே முடியாது. “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்” இந்த பாடலுக்கு இசையமைத்தவர் கீரவாணி தான். அத்துடன் சமீபத்தில் நாட்டு நாட்டு பாடல் முலம் ராஜமௌலிக்கு பெருமை சேர்த்ததோடு இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா சினிமாவிற்கும் பெருமை சேர்த்து விட்டார்.

இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். இவர் பழம்பெறும் மியூசிக் டைரக்டர். இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். கடந்த வருடம் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் படத்தில் தண்ணீர் தொட்டி சுகுமாராக இவருடைய கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →