5 singing tamil actor actress: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் திரையரங்கில் நேருக்கு நேர் மோதிக் கொண்டு தங்களது மார்க்கத்தை நிலை நிறுத்திக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் பிற நடிகர் நடிகைகளின் படங்களுக்காக ஹீரோ ஹீரோயின்ஸ் பாடி கொடுத்து அவர்களது படங்களின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்திருக்கின்றனர். இது சிலருக்கு வியப்பளித்தாலும் அதுதான் உண்மை. அப்படி மற்ற நடிகர் நடிகைகளின் படங்களுக்கு பாடி கொடுத்த ஐந்து பிரபலங்களை பற்றி பார்ப்போம்.
சித்தார்த்- ஜெயம் ரவி: நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் சித்தார்த். இவர் வளரும் இளம் நடிகராக இருந்த ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம்பெற்ற ‘அடடா அடடா அடடா.. என்னை ஏதோ செய்கிறாய்!’ என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடி கொடுத்திருக்கிறார். மிகவும் துள்ளல் நிறைந்த இந்த பாடலைக் கேட்கும்போதே, எங்கிருந்தோ எனர்ஜி வரும். இதனால் இளசுகளின் பேவரைட் லிஸ்டில் இந்த பாடல் முக்கிய பங்கு வகிக்கும். இந்த பாடலை ஜெயம் ரவியின் வளர்ச்சிக்காக சித்தார்த் பாடி கொடுத்திருக்கிறார்.
தனுஷ்- கார்த்தி: நடிகராக மட்டுமல்லாமல் இளசுகளுக்கு டானிக்காக இருக்கக்கூடிய எனர்ஜி மிகுந்த பாடல்களை கொடுக்கக் கூடியவர் தான் நடிகர் தனுஷ். இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஆசைதான்’ என்ற பாடலை பாடி கொடுத்திருக்கிறார். கார்த்தியை சினிமாவில் தூக்கி விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தனுஷ் இந்த பாடலை பாடி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலைக் கேட்கும்போதே ரசிகர்களையும் அந்த பாடலோடு இணைந்து பாட வைத்தது. அந்த அளவிற்கு இந்த பாடலில் தனுஷின் குரல் ரசிகர்களை வசியம் செய்தது.
ரம்யா நம்பீசன்- லட்சுமிமேனன்: நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இருக்கக்கூடிய ரம்யா நம்பீசன் சினிமாவில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக லட்சுமிமேனனுக்காக அவர் நடிப்பில் வெளியான பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற ‘ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை’ என்ற பெப்பி சாங்கை பாடி இருப்பார். அந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பு லஷ்மிமேனனை குடும்ப குத்துவிளக்காக பார்த்த ரசிகர்களுக்கு, இதில் அவர் கொஞ்சம் ராவாக நடனமாடி இருப்பது இளசுகளை குதூகல படுத்தியிருக்கும். இதற்கு காரணம் அந்தப் பாடலில் இடம்பெற்ற குரல் தான்.
ஸ்ருதிஹாசன்- ஹன்சிகா: தமிழ் சினிமாவிற்கு முதலில் பாடகியாக அறிமுகமான கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், பிறகு ஹீரோயின் ஆகவும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சக நடிகையான ஹன்சிகாவிற்காக அவர் நடித்த ‘மான் கராத்தே’ படத்தில், அனிருத்தின் இசையில் அவருடன் இணைந்து ‘உன் விழிகளில்’ என்ற ரொமான்டிக் பாடலைப் பாடினார். இந்தப் பாடல் காதலர்களுக்காகவே அமைக்கப்பட்ட பாடல் போலவே அவர்களை அடிக்கடி கேட்க வைத்தது.
நகுல்- கமலஹாசன்: நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்த நகுல், தமிழ் சினிமாவில் தேவயானி தம்பியாக ரசிகர்களுக்கு பரீட்சையமானார். கோலிவுட்டின் ஜாம்பவானாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற இன்ட்ரோ சாங்கில் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு தாறுமாறாக விளையாடிய போது ‘கற்க கற்க’ என ஒலிக்கும் பாடலை நகுல்தான் பாடினார். இதில் கமல் மாஸ் காட்டிய போது பின்னணியில் ஒலிக்கும் நகுலின் குரல் அந்தக் காட்சிக்கு மேலும் வலு சேர்த்து இருக்கும்.