5 Actors : சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கடினம் எனில், அதிலும் தன் கொள்கையை மீறாது கதாபாத்திரம் ஏற்று நடிப்பது என்பது பெரிதாய் பார்க்கப்பட வேண்டிய விஷயம். மேலும் தனக்கு விருப்பம் இல்லாத கதாபாத்திரத்தை ஏற்க மறுத்து வாய்ப்பை நிராகரித்த ஹீரோக்களும் உண்டு. அவ்வாறு கொள்கையோடு சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.
டி ராஜேந்தர்: பன்முகத் திறமை கொண்ட இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த எண்ணற்ற படங்கள் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறது. மேலும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டிய இவர் தன் படங்களில் எந்த சூழ்நிலையிலும் பெண்களிடத்தில் நெருக்கம் காட்டியதில்லை. மேலும் இத்தகைய கொள்கையோடு தான் பட வாய்ப்புகளை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமராஜன்: இவர் கிராமத்து கெட்டப்பில் ஏற்று நடித்த எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டுள்ளது. அவ்வாறு கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பாட்டுக்கு நான் அடிமை போன்ற படங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றவர். மேலும் தான் மேற்கொண்ட படங்களில் குடித்தோ, புகைபிடித்தோ நடிக்காதவர். அதைத்தொடர்ந்து தன் படங்களில் இத்தகைய கொள்கையை கடைசி வரை பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கிரண்: சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராஜ்கிரண். அவ்வாறு என்னை பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, பாண்டவர் பூமி போன்றவை இவர் பேர் சொல்லும் படங்கள். அதிலும் குறிப்பாக எந்த படங்களிலும் இவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்: தமிழ் சினிமாவில் இவர் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு மக்களின் பேராதரவை பெற்றவர். தான் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில், முன்னணி கதாநாயகனாக நடித்து வெற்றி கண்ட படங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக இவர் நடித்த எந்த படத்திலும் இவரின் சொந்த குரல் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி: இவர் தன் தனிப்பட்ட ஸ்டைலால் வெற்றி கண்ட படங்கள் ஏராளம். அவ்வாறு ஆரம்பத்தில் வில்லனாய் இடம் பெற்ற இவர் புகை பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து அவ்வப்போது இவரின் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை, மறுத்து வருவதை கொள்கையாகக் கொண்டிருக்கிறார்.