வயசுலாம் ஒரு மேட்டரே இல்ல என திருமணம் செய்த 5 நடிகர்கள்

பிரபலங்களின் திருமணம் என்றாலே அதற்கு எதிர்பார்ப்பு அதிகம். ஆனால் தற்போது வயது வித்தியாசம் பார்க்காமல் நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கேலிக்கூத்தாய் அமைந்து வருகிறது. முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபுறம் தனக்கு ஏற்ற துணையை தேடிக் கொள்ளும் இவர்கள் மறுபுறம் இவர்கள் நடந்து கொள்வது அநாகரிகத்தை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட 5 பிரபலங்களை பற்றி இங்கு காணலாம்.

ஆர்யா-சாயிஷா: 2018ல் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கஜினிகாந்த். இப்படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடியாக நடித்திருப்பார்கள். அதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்தின் போது சாயிஷா-21 மற்றும் ஆர்யா- 38 . சுமார் 17 வயது வித்தியாசத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்திவிராஜ்-ஷீத்தல்: பிரபல நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தனது 57வது வயதில் ஷீத்தல் என்னும் 24 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சுமார் 33 வயது வித்தியாசத்தில் இது போன்ற திருமணத்தை பலர் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுபோன்ற தப்பான வழிகாட்டுதலை மேற்கொள்ளும் பிரபலங்களை சாடும் விதமாக இவரின் செயல் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து இவர்கள் செய்யும் அட்டூழியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வேலு பிரபாகரன்-ஷெர்லி: பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான வேலு பிரபாகரன், 60 வயதில் தன் படத்தில் நடித்த நடிகை ஆன ஷெர்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 30 வயது வித்தியாசத்தில் மேற்கொண்ட திருமணத்தை கண்டு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வயதான நிலையில் இவர் செய்த காரியம் வளரும் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக இருந்து வருகிறது.

பிரகாஷ் ராஜ் -போனி வர்மா: 2010ல் பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ், போனிவர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்த பிரகாஷ்ராஜ் தன் 45 ஆவது வயதில் இவரை மணந்து கொண்டார் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஸ் வித்யார்த்தி-ரூபாலி: தன் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்பு ஆசிஸ் வித்யார்த்தி தன் 60 வயதில், 50 வயது நிறைந்த ரூபாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற இவர்கள் இருவரின் திருமணம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது போன்ற திருமணங்களை பிரபலங்கள் செய்து வருவது வழக்கமாகி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →