திருமணத்தால் மார்க்கெட் இழந்த 5 நடிகர்கள்

சில நடிகர்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றியை கொடுத்து வந்த நிலையில் அவருடைய சினிமா கேரியர் குறையும் அளவிற்கு அவர்களை புரட்டி போட்டது என்றால் அவர்களுடைய திருமண வாழ்க்கை தான். திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய மார்க்கெட் குறைந்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு சில நடிகர்களின் நிலைமை மாறிவிட்டது. அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

ராம்கி: இவர் சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து செந்தூரப்பூவே, மருதுபாண்டி, இணைந்த கைகள், வனஜா கிரிஜா, மாயா பஜார் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர், நடிகை நிரோஷாவே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னே ஹீரோ என்கிற பவர் குறைந்து விட்டது.

பிரசாந்த்: இவர் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார். 90களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக மக்கள் மனதை கொள்ளை அடித்த நடிகராக வலம் வந்தார். அத்துடன் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்ற கலைஞன் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். ஆனால் 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்த பிறகு குடும்பப் பிரச்சனையால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியாமல் சினிமா கேரியரை தொலைத்து விட்டார்.

அரவிந்த்சாமி: இவர் தளபதி படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து நல்ல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நச்சென்று இடத்தை பிடித்து விட்டார். அதன்பின் இவருடைய திருமண முடிந்த கையோடு இவருடைய மவுஸ் குறைய ஆரம்பித்துவிட்டது. அதனால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோ வாய்ப்பு குறைந்து கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக இவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தினால் ரொம்ப வருடமாக சினிமாவிற்கு தலை காட்டாமல் போய்விட்டார்.

பிரசன்னா: இவர் பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து காதல் டாட் காம், அழகியத்தியே, கண்ட நாள் முதல் போன்ற பல படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு அடுத்து இவருடைய சினிமா கேரியர் முடிந்து விட்டது என்றே சொல்லலாம்.

ஆர்யா: இவர் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் நடித்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, நான் கடவுள், சிவா மனசுல சக்தி, மதராசபட்டினம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அத்துடன் முன்னணி நடிகராகவும் வந்த நிலையில் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இவருடைய படங்கள் எதுவும் ஓடாமல் ஒவ்வொரு படத்திலும் நடித்துவிட்டு வெற்றிக்காக தவியாய் தவித்துக் கொண்டு வருகிறார். இவருடைய சினிமா கேரியரை போய்விட்டது என்று சொல்லலாம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →