சினிமாவில் விக் வைத்து நடிக்கும் 5 நடிகர்கள்.. வெளியில் கெத்தாக செல்லும் சூப்பர் ஸ்டார்

சினிமா பிரபலங்கள் தங்களது வயதை கடந்தும் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் படத்தில் விக் வைத்து நடிக்கிறார்கள். இப்போது பெரும்பாலான நடிகர்கள் இதுபோன்று தான் நடிக்கிறார்கள். அந்த நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹேர் ஸ்டைல் வைத்து தான் பல ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அவர் இப்போது விக் வைத்து நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் வெளியில் செல்லும்போது எந்த பந்தாவும் இல்லாமல் தன்னுடைய தோற்றத்தை அப்படியே ரசிகர்களுக்கு காண்பித்து வருகிறார்.

சத்யராஜ் : ஹீரோவாக ஒரு காலத்தில் கலக்கி வந்த சத்யராஜ் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சத்யராஜ் பெரும்பான்மையான படங்களில் தன்னுடைய நிஜத் தோற்றத்திலேயே நடித்துள்ளார். ஒரு சில படங்களில் விக் வைத்தும் நடித்து வருகிறார்.

லாரன்ஸ் : நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பின்பு தன்னுடைய நடிப்பு திறனால் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக லாரன்ஸ் விக் வைத்து படங்களில் நடித்து வருகிறார்.

அரவிந்த்சாமி : ஒரு காலகட்டத்தில் அதிகப் பெண் ரசிகர்களை பெற்றிருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. தற்போது படங்களில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டி வருகிறார். இவருடைய முடி உதிர்வு பிரச்சினை காரணமாக தற்போது படங்களின் விக் வைத்து தான் அரவிந்த்சாமி நடித்து வருகிறாராம். இது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

விஜய் : தளபதி விஜய் மாஸ்டர் படத்திலிருந்து விக் பயன்படுத்தி நடித்து வருகிறார். இவருடைய முடி உதிர்தல் பிரச்சனைக்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அப்போதும் பலனளிக்காத காரணத்தினால் வேறு வழி இல்லாமல் படங்களில் மட்டுமல்லாமல் வெளியில் செல்லும் போதும் விதவிதமான விக்கை விஜய் பயன்படுத்தி வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →