வடிவேலு செய்த துரோகத்தால் மோசம் போன 5 நடிகர்கள்..

நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இவரை பற்றி யாரும் அறியாத விஷயங்கள் குறித்து வெளியாகி வருகிறது. அதுவும் இவருடன் ஒன்றாக நடித்த சக நடிகர்கள் இவரது மோசமான குணங்களை பற்றி கூறி வருவது சற்று அதிர்ச்சி தரும் வகையிலே உள்ளது. இதனிடையே வடிவேலுவால் தங்களுடைய கேரியரையே தொலைத்த 5 நகைச்சுவை நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

டெலிபோன் ராஜ்: வடிவேலு போலவே தோற்றம் கொண்ட இவர் தமிழில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அந்த வகையில் மறுபடியும் ஒரு காதால் திரைப்படத்தில் இவரது ஹோட்டலில் சாப்பிட வரும் வடிவேலு பல லிஸ்டுகளை சொல்லும் நிலையில், அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என்று இவர் கூறிய ஒற்றை வசனம் தற்போது வரை மீம்ஸ்களில் உலா வருகிறது. இதனிடையே வடிவேலுவால் தனது வாழ்வே போய்விட்டது என பல பேட்டிகளில் புலம்பி வருகிறார்.

பாவா லக்ஷ்மணன் : நடிகர் வடிவேலுவுடன் 30க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்த இவர் மாயி திரைப்படத்தில் இவர் பேசிய வா மா மின்னல் என்ற வசனம் இன்று வரை பிரபலமானது. தற்போது காலில் உள்ள கட்டைவிரல் எடுக்கப்பட்டு சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு வரும் இவரது மருத்துவ செலவுக்காக பலரும் உதவி செய்து வருகின்றனர். ஆனால் வடிவேலு ஒரு உதவியும் செய்யாமல் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்து வருகிறார்.

முத்துக்காளை: வடிவேலுவுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், காதை தொடும் காமெடி, வின்னர் பட காமெடி என பல காமெடி காட்சிகளில் வடிவேலுவை ஒரு வழிபண்ணி விடுவார். இவர் வடிவேலுவுடன் நடிக்கும்போது வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என வடிவேலு கண்டிப்புடன் சொல்லிவிடுவாராம். இதன் காரணமாக தன்னால் மிக பெரிய உயரத்திற்கு வர முடியவில்லை என முத்துக்காளை தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

கிரேன் மனோகர்: 2000 ஆம் ஆண்டுகளுக்கு மேல் வடிவேலுவுடன் கிரேன் மனோகர் பல படங்களில் நடித்து பிரபலமானார். அதிலும் முக்கியமாக வின்னர், கச்சேரி ஆரம்பம், அய்யா , மருதமலை உள்ளிட்ட படங்களில் வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். ஆனால் இவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் தற்போது வரை வாடகை வீட்டில் வாழ்ந்து பட வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். ஆனால் வடிவேலு இவரை கண்டுக்கொள்ளாமல் உள்ளதாக வருத்தத்துடன் பேசி வருகிறார்.

ஜெயமணி: பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகைச்சுவை நடிகர் செந்தில் போன்ற தோற்றம் கொண்ட இவர் வடிவேலுவின் சொந்தக்காரர் ஆவார். வடிவேலு மூலமாக திரைத்துறையில் கால் பதித்த இவர் சில படங்களில் மட்டும் வடிவேலுவுடன் இணைந்து நடித்து பாராட்டப்பெற்றார். ஆனால் இவரது வளர்ச்சி வடிவேலுவுக்கு பிடிக்காததால் இவருக்கு வந்த வாய்ப்புகளை வடிவேலு தட்டிப்பறித்து இவரது மார்க்கெட்டை மொத்தமாக வடிவேலு காலி செய்துள்ளாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →