5 Tamil Actresses: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகள், இப்போது முத்திப்போன கத்திரிக்காய் என்று சினிமா வாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட்டை சுத்தமாகவே இழந்து தவிக்கிறார்.
பூனம் பஜ்வா: சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் ஆன்டி ரோல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரை முத்தின கத்திரிக்காய் என்று ஓரம் கட்டி விட்டனர்.
அனுஷ்கா ஷெட்டி: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா 2009 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்பு வேட்டைக்காரன், சிங்கம், என்னை அறிந்தால், பாகுபலி போன்ற தரமான படங்களை கொடுத்த அனுஷ்காவிற்கு வினையாய் அமைந்த படம் தான் இஞ்சி இடுப்பழகி.
இந்த படத்தில் நூறு கிலோவிற்கு மேல் தன்னுடைய எடையை ஏற்றி வித்தியாசமான கேரக்டரில் நடித்து, புகழின் உச்சத்திற்கு செல்ல நினைத்த இவரது எண்ணம் தவறாக முடிந்தது. அந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் படுத்து விட்டது. அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
ஹன்சிகா: குட்டி குஷ்பூ என தமிழ் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி, தமிழில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா 2014 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். பின்பு வெகு சீக்கிரமே சிம்புவுடன் தன் காதலை முறித்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் காதலர் சோஹேல் கதுரியாவை மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த மாற்றமும் இல்லை என மறுபடியும் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டார். ஆனால் கல்யாணம் ஆன பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்து விட்டது. அவர் எதிர்பார்த்த அளவு டாப் நடிகர்களின் பட வாய்ப்புகளை தர மறுக்கின்றனர்.
சாய் பல்லவி: தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக இருந்து வரும் நடிகை தான் சாய் பல்லவி. கோவையை சேர்ந்த இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலிருந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அந்தப் படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய போதிலும் இன்றளவும் அவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேச்சுரல் பியூட்டியாக பார்க்கப்படும் இவரை முத்தின கத்திரிக்காய் என்றும் ஒதுக்க பார்க்கின்றனர். இருப்பினும் அவருடைய திறமைக்காக ஒரு சில பட வாய்ப்புகள் கிடைக்கிறது. சாய் பல்லவி தற்போது கமலஹாசன் தயாரிக்கும் எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
டாப்ஸி: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் தான் நடிகை டாப்ஸி. அதன் தொடர்ச்சியாக வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாக இருக்கிறார். வெள்ளாவி தேவதை ஆக இருக்கக்கூடிய டாப்ஸிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.