Actress Jyothika: நடிகைகளை பொறுத்தவரை என்னதான் ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்றாலும், அவை பெரிதாக பேசப்படுவதில்லை. தன் தனிப்பட்ட நடிப்பினை வெளிகாட்டும் விதமாய் இருக்கும் கதாபாத்திரமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தருகிறது.
அவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளும் விதமாய் இறங்கி கலக்கிய கதாபாத்திரங்கள் ஏராளம். அதில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று அசத்திய 5 நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.
ஜோதிகா: 2018ல் பாலா இயக்கத்தில் வெளிவந்த ஆக்சன் படம் தான் நாச்சியார். இப்படத்தில் இவானா, ஜி வி பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் நேர்மை தவறாது, நியாயத்திற்காக போராடும் ஐபிஎஸ் அதிகாரியாய் களமிறங்கி இருப்பார் ஜோதிகா. இவரின் மிரட்டலான, துணிச்சலான நடிப்பினை பாலா படத்தில் முழுமையாக செயல்படுத்தி இருப்பார். மேலும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
நயன்தாரா: 2018ல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் தான் இமைக்கா நொடிகள். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். போதைக்கு அடிமையாக்கும் கும்பலின் தலைவனை வெறித்தனத்தோடு பின்பற்றி தன் பகையை தெரிவித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் நயன்தாரா. இப்படம் இவரின் நடிப்பில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியை கண்டது.
அமலா பால்: தன் எதார்த்தமான நடிப்பால் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர் 2013 ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படமான தலைவா படத்தில், ஏ சி பி அதிகாரியாய் நடித்திருப்பார். இப்படத்தில் இவரின் கெட்டப் பெரிதாக பேசப்பட்டாலும், போலீஸ் அதிகாரிக்கான துணிச்சலான நடிப்பினை இவர் வெளிகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகா: குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் 2011ல் கிச்சா இயக்கத்தில் வெளிவந்த படமான பவானியில் இடம் பெற்றிருப்பார். இப்படத்தில் ஏ சி பி பவானி கதாபாத்திரத்தில் தன் மாறுபட்ட நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். மேலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தன் துணிச்சலான நடிப்பினால் பெரிதும் பேசப்பட்டார்.
காஜல் அகர்வால்: தன் எதார்த்தமான நடிப்பினால், முன்னணி கதாநாயகியாக பெரிதும் பேசப்பட்டவர் காஜல் அகர்வால். இவர் ஹீரோயினாக ஏற்ற எண்ணற்ற படங்களில் வெற்றி கண்டுள்ளார். இருப்பினும் 2014ல் விஜய், மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் ஜில்லா. இப்படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்த காஜல் அகர்வாலின் நடிப்பிற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.