கிராமத்து பட கவர்ச்சியில் சொக்க வைத்த 5 நடிகைகள்..

5 Actress: தன் திறமைக்கேற்ற வாய்ப்பினை தவற விடாது கிராமத்து சப்ஜெக்ட் படங்களையும் மேற்கொண்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் உண்டு. தனக்கு வராத கதாபாத்திரமாக இருந்தாலும், அதை ஏற்று நடித்து வெற்றி கண்டிருக்கின்றனர். அவ்வாறு கிராமத்து பட கவர்ச்சியில் கலக்கிய 5 நடிகைகள் பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

கஸ்தூரி: 90 காலகட்டத்தில் இவர் மேற்கொண்ட கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கிராமத்து கெட்டப்பில் தான் இருந்திருக்கிறது. அவ்வாறு இவர் மேற்கொண்டு எண்ணற்ற படங்களில் சின்னவர், புதிய முகம், உடன்பிறப்பு போன்ற படங்களில் கிராமத்து சப்ஜெக்ட் ஏற்று குடும்பபாங்கான கதாபாத்திரம் ஏற்ற மக்களிடையே பெரிதும் பேசப்பட்டார்.

ரஞ்சிதா: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தவர் ரஞ்சிதா. 90 கால கட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நாடோடி தென்றல், தோழர் பாண்டியன், என் ஆசை மச்சான், பெரிய மருது போன்ற படங்களில் கிராமத்து கதாபாத்திரம் மேற்கொண்டு சேலையில் இளசுகளை சொக்க விட்டு இருப்பார். மேலும் இப்படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

ராதா: அம்பிகாவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, இளம் வயதில் நடிக்க வந்து முன்னணி கதாநாயகியாக எண்ணற்ற படங்களில் வெற்றி கண்டு இருக்கிறார். பிக்பாக்கெட், ராஜாதி ராஜா, முதல் மரியாதை போன்ற படங்களில் கிராமத்து கதைக்கு ஏற்றவாறு, தன் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இவரின் எதார்த்தமான மண் மணம் மாறாத நடிப்பு தான் முதல் மரியாதை படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

ரோகிணி: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மலையாள மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக இவர் நடித்த எண்ணற்ற படங்கள் வெற்றி கண்டு இருக்கிறது. தமிழில் சிலம்பு, புது வாரிசு, தந்துவிட்டேன் என்னை, பவுனு பவுனுதான் போன்ற படங்களில் கிராமத்து கதாபாத்திரம் என்று சிறப்புற நடித்திருப்பார்.

பானுப்பிரியா: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் பானுப்பிரியா. 90 காலகட்டத்தில் மகுடம், தெற்கு தெரு மச்சான், சுந்தரகாண்டம், பங்காளி போன்ற படங்களில் கிராமத்து கதாபாத்திரம் ஏற்று எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். அதிலும் குறிப்பாக சேலையில் தன் கவர்ச்சியான நடிப்பின் மூலம் சொக்க வைத்தார் என்றே கூறலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →