காசு காசுன்னு தாராள கவர்ச்சியை காட்டிய 5 நடிகைகள்.. மொத்தமாக சோலியை முடித்த கேரியர்

Five Glamour Actress: ஆரம்பத்தில் பவ்வியமாக நடிக்க வந்த பல நடிகைகள் போகப்போக வாய்ப்புக்காக கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்து வந்திருக்கிறார்கள். இது எல்லா நடிகைகளுக்கும் கைகொடுக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இருக்காது. இதில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இன்னும் சில நடிகைகளின் கேரியர் மொத்தமாக முடிந்து விடும் நிலைமைக்கு காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

மோனிகா: இவர் நடிகை மோனிகா என்ற சொல்வதை விட குழந்தை நட்சத்திர ஆர்டிஸ்ட் என்று சொன்னால் தான் பலருக்கும் இவரை தெரியும். அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திர கேரக்டரில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்களில் நடித்த பின்பு எதிர்பார்த்த மார்க்கெட் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவருடைய கவர்ச்சியை ஆயுதமாக காட்டி பட வாய்ப்பு பெற்று விடலாம் என்று ஒரு யுத்தியை பயன்படுத்தினார். அதன் மூலம் சிலந்தி என்ற படத்தில் கவர்ச்சியை கண்ணா பின்னான்னு காட்டி நடித்தார். அப்படி இருந்தும் இவருக்கு சொல்லும் படியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

கஸ்தூரி: ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர் தற்போது சமூகப் பிரச்சினைகளுக்கு மிகவும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார். அப்படி இருந்தும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது சில பாடலுக்கு கவர்ச்சியை காட்டி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவும் இவருக்கு செட்டாகாத அளவிற்கு வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

மஞ்சுளா: அந்தக் காலத்தில் கிளாமர் பாடலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த நடிகையே மஞ்சுளா தான் என்று சொல்லலாம். அந்த வகையில் நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன் இன்னும் போன்ற பல படங்களில் கவர்ச்சியை தாராளமாக காட்டி ரசிகர்கள் மற்றும் நடிகர்களின் கவனத்தை திருப்பியவர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும். அதனாலேயே இவருக்கு பல பட வாய்ப்புகள் இவரை தேடிக் கொண்டு வந்தது. இதனால் எக்கச்சக்கமான பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டார்.

அமலா பால்: இவர் நடித்த முதல் படமே மிக மோசமான கேரக்டரை வைத்து பார்க்கவே கண் கூசும் காட்சிகளில் தான் சிந்து சமவெளி என்கிற படத்தில் நடித்தார். அதன் மூலம் டாப் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. அடுத்து கொஞ்ச நாளிலேயே திருமண வாழ்க்கைக்கு போன இவரால் சினிமாவை விட்டு இருக்க முடியவில்லை. அதனால் கல்யாண வாழ்க்கையும் வேண்டாம், புருசனும் வேண்டாம் என்று இவருக்கான வாழ்க்கையை தேடி கொண்டார். அதன் பின் பல சர்ச்சை கூறிய படங்களில் ஆடையே இல்லாமலும்,லிப் லாக் காட்சிகளிலும் நடித்து இவருடைய கேரியரை மொத்தமாக கெடுத்துக் கொண்டார்.

விந்தியா: ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக சங்கமம் படத்தில் பவ்வியமாக நடித்துவிட்டு போகப் போக காசுக்காகவும், வாய்ப்புக்காகவும் இவருடைய ஆடையை குறைத்துக் கொண்டு கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்தார். அப்படி இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. அதனால் சினிமாவை மொத்தமாக விட்டுவிட்டு அரசியலில் இறங்கி மேடைப் பேச்சுகளில் விவாதத்தை வைத்துக்கொண்டு வருகிறார். ஆக மொத்தத்தில் இந்த நடிகைகள் அனைவரும் கவர்ச்சியை காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்று சினிமாவிற்கு குட் பாய் சொன்னவர்கள்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →