கெட்ட வார்த்தை பேசி நடித்த 5 நடிகைகள்..

படத்தின் கதை எவ்வளவு முக்கியமோ அதேபோல் கதாபாத்திரத்திற்குரிய வசனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அக்காலத்தில் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தூய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினர். ஆனால் இப்பொழுது எல்லாம் அவ்வாறு எந்த நிபந்தனையும் இல்லாமல் சரளமாக கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தன் இமேஜே போனாலும் பரவாயில்லை என்று கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதாக தரலோக்கலாகவும் வசனம் பேசி வருகின்றனர். அவ்வாறு எதையும் பொருட்படுத்தாமல் படம் முழுக்க பீப் சவுண்ட் ஏற்படுத்தும் அளவிற்கு பேசி நடித்த 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

ஓவியா: 2019ல் அனிதா உதீப் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஓவியா 90 எம் எல். இப்படத்தில் ஓவியா, மசூம் சங்கர், மோனிஷா ராம், ஸ்ரீ கோபிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் அடல்ட் காமெடி படம் என்பதால் சரளமாக கெட்ட வார்த்தைகளை கொண்டு விளையாடிருப்பார்கள். மேலும் படத்தில் ஹைஃபையாக தெரியும் இவர்களின் இத்தகைய பேச்சு காது குசும் அளவிற்கு படம் முழுக்க பீப் சவுண்ட் போடப்பட்டிருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: 2018ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வடசென்னை. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தின் கதைக்கு ஏற்ப லோக்கல் வார்த்தைகளை எளிதாக பேசி நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இவரின் நடிப்பு தத்துரூபமாக அமைந்திருக்கும்.

நயன்தாரா: 2021ல் நயன்தாராவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் நெற்றிக்கண். படம் மாபெரும் வெற்றியை கண்டிருந்தாலும் பிரபல நடிகை இப்படி கெட்ட வார்த்தை பேசி நடித்தது கேட்பவர் இடையே தர்ம சங்கடத்தை உண்டாக்கி இருக்கும். மேலும் இவரின் எதார்த்தமான நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை தேடி தந்தது.

ரீமா சென்: 2010ல் வரலாற்றை தழுவி வெளிவந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் பார்த்திபன், கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ரீமா சென்னின் நடிப்பு படத்திற்கு ஏற்ப கதாபாத்திரத்தோடு ஒன்றி அமைந்திருக்கும். அதிலும் கார்த்தியிடம் இவர் பேசும் வார்த்தைகள் படுமோசமாக இருக்கும். அதுவே படத்திற்கான ஹைலைட் ஆகவும் அமைந்தது.

கீர்த்தி சுரேஷ்: 2022ல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சாணி காயிதம். இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். மேலும் படத்தில் ஏற்படும் அநீதியால் வெறுத்து போய் மன குமுறலை வெளிக்காட்டும் விதமாக கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருப்பார் கீர்த்தி சுரேஷ். ஆனாலும் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →