மூன்று மொழிகளிலும் ராணிகளாக பார்க்கப்பட்ட 5 நடிகைகள்.. ஸ்ரீதேவியே ஆச்சரியப்பட வைத்த பிரபல நடிகை

பொதுவாக நடிகர்களை விட நடிகைகள் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே கோலிவுட், டோலிவுட், மாலிவூட் என எல்லா மொழில்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகிறார்கள். ஒரு சில நடிகைகள் 2,3 படங்களிலேயே காணாமல் போய் விடுவார்கள். தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்கு செல்வது தான் ரொம்பவும் கடினம். இப்போது இருக்கும் நயன்தாராவும், சமந்தாவும் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கோலிவுட்டில் பாவாடை தாவணியில் சுற்றி கொண்டிருந்த பெண் 80 களிலேயே பாலிவுட் சென்றார்.

ஸ்ரீதேவி: தழ்நாட்டில் விருதுநகரில் பிறந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின்னாளில் இயக்குனர் பாலசந்தரால் கதாநாயகியாக அறிமுகப்படுத்தபட்டார். ரஜினி, கமல் வளர்ந்து வந்த நாட்களில் இவருடைய பங்களிப்பு அவர்களுது வளர்ச்சியில் கொஞ்சம் உண்டு. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் அசத்திய ஸ்ரீதேவி, பாலிவுட்டிற்கு சென்று அங்க முடிசூடா ராணியாக மாறினார். ஸ்ரீதேவி மொத்தம் 300 படங்களில் நடித்து இருக்கிறார்.

ஹேமமாலினி: ஹேமமாலினி நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், நடன கலைஞராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். ஹேமமாலினி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து விருதும் பெற்று இருக்கிறார். இன்றும் அதே இளமையுடன் இருக்கும் நடிகை இவர்.

ஷோபனா: ஷோபனா நடிகை பத்மினியின் உறவினர் ஆவார். இவர் சிறந்த நடனக்கலைஞர். இரண்டு முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம் என அத்தனை மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். ‘மணிச்சித்ர தாழ்’ ஷோபனா நடித்த திரைப்படங்களில் தி பெஸ்ட் ஆகும்.

விஜயசாந்தி: விஜயசாந்தி நடிகையும், அரசியல்வாதியும் ஆவார். இவர் அரசியலில் வருவதற்கு முன்பு 186 படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நடித்த விஜயசாந்தி லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

சரோஜாதேவி: சரோஜாதேவி பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் திரைப்பட துறையினரால் கன்னடத்து பைங்கிளி , அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்பட்டார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் எம்ஜிஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →