இங்க பருப்பு வேகாததால் ஒரே படத்தில் காணாமல் போன 5 நடிகைகள்

Bollywood Heroines Debut in Kollywood: பாலிவுட்டை சேர்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என நினைத்து இங்கு வருவதுண்டு. அதேபோல் உலக அழகி பட்டம் பெற்ற நடிகைகள் தமிழில் முதலில் நடித்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடலாம் என்ற சென்டிமென்ட் அப்போது இருந்தது. ஒரு சில இயக்குனர்கள் பாலிவுட் நடிகைகளை தமிழ் சினிமாவில் நடிக்க வைப்பதை மிகப்பெரிய சாதனையாகவே நினைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இதில் அதிகமாக எதிர்பார்த்து வரும் நடிகைகள் செட்டாகாமல் ஒரு சில படங்களோடு டாட்டா காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.

கஜோல்: 1997 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மின்சார கனவு திரைப்படத்தின் நடிகை கஜோல் நேரடியாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் இந்த படத்திற்கு பிறகு கஜோல் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. பல வருடங்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லியாக இவர் நடித்திருந்தார். இருந்தாலும் அவருக்கு முதலில் கிடைத்த வரவேற்பு இரண்டாவது இன்னிங்சில் கிடைக்கவில்லை.

இலியானா: நடிகை இலியானா முதன் முதலில் ரவி கிருஷ்ணா மற்றும் தமன்னா நடித்த கேடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் முன்னணி ஹீரோயின் ஆக மாறிய பிறகு, மீண்டும் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் அவர் வேறு எந்த படங்களும் பண்ணவில்லை.

சுஷ்மிதா சென்: நடிகை சுஷ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் ஆவார், நாகார்ஜுனா நடித்த ரட்சகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சுஷ்மிதா. இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் அதன் பிறகு இவர் தமிழில் தலை காட்டவில்லை.

வித்யா பாலன்: வித்யா பாலன் பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருப்பவர். இவர் எப்போது தமிழில் படங்கள் நடிப்பார் என தமிழ் ரசிகர்கள் கூட காத்திருந்தனர். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போயிருப்பார். அதன் பின்னர் தமிழ் படங்களில் இவர் நடிக்கவில்லை.

ராதிகா ஆப்தே: நடிகை ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடித்திருந்த தோனி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார். கபாலி படத்தில் இவர் நடித்த குமுதவல்லி கேரக்டர் இவருக்கு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் வாங்கி கொடுத்தது. இருந்தாலும் அதன் பின்னர் இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →