விஜய் காலை வாரிவிட்ட 5 சொதப்பலான இயக்குனர்கள்

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய்யின் ஆரம்ப காலகட்டம் மட்டுமல்ல இடைக்காலத்திலும் படாத பாடு பட்டிருக்கிறார். அதிலும் கடந்த 2010 ஆம் ஆண்டுகளில் இருந்து தொடர்ந்து வெளியான 5 படங்கள் அவருக்கு படு தோல்வியை தந்தது. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த சொதப்பலான 5 இயக்குனர்கள் தான் முழு காரணம்

சுறா: 2010 வெளியான சுறா திரைப்படம் தான் விஜய்யின் 50 வது படம். இவ்வளவு ஸ்பெஷலான படத்தை எப்படி விஜய் எஸ்பி ராஜ்குமார் என்ற இயக்குனருக்கு தூக்கிக் கொடுத்தார் என தெரியவில்லை. இதற்கு முன்பு இவர் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஹிட் ஆகவில்லை. அப்படி இருக்கும்போது விஜய் தனது 50வது படத்தை இந்த சொதப்பல் இயக்குனருக்கு கொடுத்து படு தோல்வியை சந்தித்தார்.

இந்த படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 80 முதல் 100% வரை நஷ்டத்தை உருவாக்கி மாபெரும் பிரம்மாண்ட தோல்வியை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதை கேட்காமலே அதில் நடிக்க ஒத்துக் கொண்டதும் விஜய்யின் முட்டாள்தனம் என ரசிகர்கள் படம் வெளியான பிறகு கடுமையாக விமர்சித்தனர்.

வேலாயுதம்: 2011 ஆம் ஆண்டு விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலாயுதம். இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படத்தில் ஏதோ மிஸ் ஆனது போலவே திருப்தி இல்லாமல் இருந்தது. இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கியிருப்பார். ஜெயம் ராஜா அவருடைய தம்பியை வைத்து எடுத்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் அவருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால் அவருடைய சொந்த தம்பியுடன் ஒர்க் அவுட் ஆனது விஜய்யுடன் எடுபடவில்லை. விஜய்யின் வேலாயுதம் படம் வெளியாகுவதற்கு முன்பு ஜெயம் மோகனின் தில்லாலங்கடி படம் படு தோல்வியை சந்தித்தது. அதை பார்த்தாவது விஜய் சுதாரித்திருக்கணும். அப்படி பண்ணாமல் வேலாயுதம் படத்தில் இணைந்து படு தோல்வியை சந்தித்தார்.

நண்பன்: என்னதான் இப்போது பிரம்மாண்ட இயக்குனராக சங்கர் இருந்தாலும், அவர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் எதற்கு விஜய் நடித்தார் என தளபதி ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். ஏனென்றால் இந்த படம் ஹிந்தியில் வெளியான ‘த்ரீ இடியட்ஸ்’ என்ற படத்தின் ரீமேக் தான். ஏற்கனவே அந்த படத்த பார்த்துவிட்டவர்களுக்கு நண்பன் படத்தை பார்த்ததும் சலிப்பு தட்டியது.

தலைவா: விஜய்யின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியது இந்த படம் தான். ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு தளபதி ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டனர். ஏனென்றால் மாஸ் ஹீரோவை இப்படியா காட்டுவது என்று கொந்தளித்தனர். இந்த படத்தை இயக்கிய ஏஎல் விஜய் இதற்கு முன்பு அஜித்தின் கிரீடம், மதராசபட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கினார். ஆனால் தலைவா படத்திற்கு முன்பு இவர் இயக்கிய தாண்டவம் படம் படு தோல்வியை சந்தித்தது. அதைப் பார்த்தாவது விஜய் தலைவா படத்தில் ஏஎல் விஜய் உடன் இணையாமல் இருந்திருக்கலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு தலைவா படம் வசூலில் பயங்கர அடி வாங்கியது.

ஜில்லா: 2014 ஆம் ஆண்டு விஜய் மோகன் லாலுடன் இணைந்து நடித்த படம் ஜில்லா. இதில் சிவன், சக்தி என இவர்கள் போட்ட ரகளை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இந்த படத்தை நேசன் என்ற முகம் தெரியாத இயக்குனர் இயக்கியது தான் பிரச்சனை. இதுவே வேறு ஏதாவது ஒரு பெரிய இயக்குனர்கள் விஜய், மோகன்லால் இருவரையும் இன்னும் சிறப்பாக கையாண்டு இருப்பார்கள். ஆனால் நேசன் இந்த படத்தை சொதப்பி வைத்திருந்தார்.

இவ்வாறு 2010ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று நான்கு வருடம் விஜய்க்கு சூனியமான காலமாகவே மாறியது. கதை மற்றும் இயக்குனர்களை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சினைகள் நேரிடும் என்பதை கற்றுக் கொண்ட பிறகு தான் இப்போது விஜய் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் கதை மற்றும் இயக்குனர்களை நிதானமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →