5 Directors: சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படம் இயக்க ஆசைப்பட்டு ஒரே கதையை திருப்பி, திருப்பி இயக்கிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உண்டு. அந்த அளவிற்கு பார்ப்பவர்களே கண்டுபிடிக்கும் அளவிற்கு தன் கான்செப்டை ரிப்பீட் செய்து இருப்பார்கள்.
தன் கதைக்கேற்ற ஹீரோ இப்படி தான் இருக்க வேண்டும், இப்படி தான் கதை கொண்டு செல்ல வேண்டும் என ஒரே தோரணத்தில் இயக்கியிருப்பார்கள். அவ்வாறு அரைத்த மாவை அரைப்பது போல் படம் இயக்கிய 5 இயக்குனர்களை பற்றி இங்கு காண்போம்.
முத்தையா: இவர் இயக்கத்தில் வெளிவந்த குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரத்திற்கு ஒரே கெட்டப்பான கருப்பு சட்டை, முறுக்கு மீசை, தொடை தெரிய வேட்டி போன்ற கொள்கையை மேற்கொண்டு இருப்பார். படம் பார்ப்பவர்கள் இடையே சலிப்பு தட்டும் விதமாய் இவை அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக கல்வி அறிவு இல்லாத ஹீரோக்கள் ஆகவும், ஒட்டுமொத்தமாய் நூறு பேரை அடித்து வில்லனை கொலை செய்யும் ஹீரோவாகவும் காட்டி இருப்பார்.
சிறுத்தை சிவா: இவர் இயக்கத்தில் பெரும்பாலும் அஜித்தை நடிக்க வைத்து வெற்றி கண்டிருப்பார். அவ்வாறு தொடர்ந்து அஜித்தை வைத்து மேற்கொண்ட படங்களான வீரம்,வேதாளம், விவேகம், விசுவாசம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இவர் படங்களுக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு, அவை தான் தங்கச்சி சென்டிமென்ட். தான் இயங்கும் படங்களில் எப்படியாவது ஒரு சில காட்சிகளில் தங்கச்சி பாசத்திற்கு உருகுவது போல் காட்டி இருப்பார்.
ராகவா லாரன்ஸ்: நடன இயக்குனர் ஆன இவர் முன்னணி கதாநாயகனும் ஆவார். அவ்வாறு பேய் சப்ஜெக்ட் படங்களுக்கு ஆர்வம் காட்டி வரும் இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என பேய்களுக்கு ஹெல்ப் செய்யும் நபராய், தன் படங்களில் அரைத்த மாவையே அரைத்து இருப்பார். இருப்பினும் இவர் படங்களில் தன் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
ராஜேஷ்: இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே காமெடி சப்ஜெக்ட் படங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் காமெடிக்காகவே மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்திருக்கும். மேலும் இவர் கதையில் ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது போன்று தான் கதை அமைத்து இருப்பார்.
கே எஸ் ரவிக்குமார்: தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படக்கூடிய இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் பிரபலங்களை கொண்டு மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் பெற்றுக் கண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவர் மேற்கொண்ட படங்கள் ஆன முத்து, நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, சமுத்திரம், பஞ்சதந்திரம் போன்ற பேமிலி சப்ஜெக்ட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருப்பார். அவை மக்களிடையே நல்ல விமர்சனங்களை கண்டு ஹிட் கொடுத்திருக்கும்.