முரட்டு ஆளாய் ராஜ்கிரண் கலக்கிய 5 படங்கள்.. நடிக்க ஆள் கிடைக்காமல் ஹீரோவான பயில்வான்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் தான் ராஜ்கிரண். தற்போது வரை தனது கம்பீரமான நடிப்பால் பலரது மனதை கொள்ளைக் கொண்ட ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த காலத்தில் தனது கட்டுமஸ்தான உடலுக்கு ஏற்றார் போல் பல கதாபாத்திரங்களில் நடித்தவர். அந்த வகையில், ராஜ்கிரன் முரட்டு தனமான கதாபாத்திரத்தில் நடித்த 5 படங்ளை தற்போது பார்க்கலாம்.

என் ராசாவின் மனசிலே: இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராஜ்கிரண், மீனா, வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பர். ஆரம்பத்தில் இப்படத்தில் வேறொரு நடிகர்கள் தான் தேர்வானார்கள். ஆனால் மாயாண்டி கதாபாத்திரம் சற்று முரட்டுத் தனமாக வேண்டும் என்பதால் இவர் இப்படத்தில் நடித்திருப்பார். கடைசி வரை குழந்தைப் பேரில் இறந்த தனது மனைவி சோலையம்மாவை நினைத்து, கடைசியில் வில்லன்களால் இறந்து விடும் மாயாண்டியின் நடிப்பு இன்றுவரை பேசப்பட கூடியவை.

அரண்மனை கிளி: ராஜ்கிரண், இயக்கி, கதை எழுதி ,தயாரித்து, நடித்த இப்படம் 1993 ஆம் ஆண்டு ரிலீசானது. அஹானா, காயத்ரி உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் ராசையா கதாபாத்திரத்தில் வேலைக்காரனாக ராஜ்கிரண் நடித்திருப்பார். அரண்மனையில் வேலை செய்யும் ராஜ்கிரனை எஜமானியாக இருக்கும் பூங்கொடி ரகசியமாக காதலிப்பார். மேலும் இப்படத்தில் முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான ஹிட்டானது.

மாணிக்கம்: இயக்குனர் கே.வி.பாண்டியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜ்கிரண், வனிதா விஜயகுமார், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருப்பார். அருள் வாக்கு கூறும் ஊர் எல்லையை பாதுகாக்கும் காவல் தெய்வமாக ராஜ்கிரண் நடித்து மிரட்டியிருப்பார். காதல்,  அக்ஷன் என இப்படத்தின் கதைக்கு ஏற்றார் போல் ராஜ்கிரணின் கதாபாத்திரம் கச்சிதமாய் அமைந்தது.

எல்லாமே என் ராசாதான்: ராஜ்குமார் கதை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த இப்படம் மாபெரும் ஹிட்டானது. சங்கவி, ரூபா ஸ்ரீ நடித்த இப்படத்தில் சிங்கராசு என்ற பொறுப்பற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தன் வாழ்வில் தனது பொறுப்பற்ற தனத்தால் நிகழ்ந்த சம்பவங்களால் மனம் திருந்தி வாழும் ராஜ்கிரணின் வாழ்க்கையில் வேறென்ன பிரச்சனைகள் வருகிறது என்ற கதையே இப்படத்தின் முடிவாகும். இளையராஜாவின் இசையில் வெளியான அதனை பாடல்களும் ஹிட்டான நிலையில் ராஜ்கிரணின் கேரியரில் முக்கியபடமாக அமைந்தது.

முனி: நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த இப்படத்தில் ராஜ்கிரண் முனி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தன்னை கொன்று தனக்கு துரோகம் இழைத்த வில்லனை பழி வாங்கும் பொருட்டு, முனி பேயாக ராகவா லாரன்ஸ் உடம்புக்குள் புகுந்துவிடும் ராஜ்கிரனின் நடிப்பு மிரட்டலாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, 3 உள்ளிட்ட படங்கள் வெளியானது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →