சினிமாவில் எத்தனையோ காமெடியன்கள் வந்துட்டு போனாலும் என்றுமே கவுண்டமணிக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. இவர் செய்யும் நக்கல் நையாண்டிக்கு வேறு யாரும் ஈடுகெட்டவே முடியாது. எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது. அதிலும் ஹீரோக்களை கலாய்த்தே நிறைய படங்களில் கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறார்.
அதில் சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
பேர் சொல்லும் பிள்ளை: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு பேர் சொல்லும் பிள்ளை திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், கே ஆர் விஜயா, ராதிகா,மனோரமா மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமலஹாசன் தத்துப் பிள்ளையாக இருந்து கே ஆர் விஜயா குடும்பத்திற்கு வரும் பிரச்சனைகளை சரி செய்து வருவார். இதில் கவுண்டமணி அந்த வீட்டின் மருமகனாக இருந்து கமலை கலாய்க்கிற என்ற பெயரில் வில்லத்தனமாக நடித்திருப்பார்.
மன்னன்: பி வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு மன்னன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பூ, மனோரமா, விசு மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கவுண்டமணி மற்றும் ரஜினி ஒரே கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களாக இருந்து செய்யும் கலாட்டா காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருக்கும். அத்துடன் பொய் சொல்லிக்கொண்டு படம் பார்க்கும் முதல் ஆளாக இருந்து டிக்கெட் வாங்கும் அந்த காட்சியிலும் இவர்களுடைய காம்பினேஷன் அதிக அளவில் கைத்தட்டல்களை வாங்கி இருக்கும்.
முறை மாமன்: சுந்தர் சி இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு முறைமாமன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயராம், குஷ்பு, மனோரமா, செந்தில் மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து ஜெயராமன் நகைச்சுவையாக நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார். அதாவது ஜெயராமின் அண்ணனாக கவுண்டமணி செய்யும் ஒவ்வொரு வேலையும் ரசிக்கும் படியாக இருக்கும். அதிலும் செந்தில் கொண்டு போகும் அந்த பாலை குடித்துவிட்டு வயிறு கலக்கிக் கொண்டு பின்பு நாயிடம் கடிபட்டு அதைத் திட்டி தனியாக பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் ரொம்பவே கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறது.
மன்மதன்: ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு மன்மதன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, ஜோதிகா, சிந்து துலானி,சந்தானம் மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிம்புவின் மாமாவாக பஞ்சர் பாண்டி என்ற கேரக்டரில் கவுண்டமணி நடித்திருக்கிறார். இதில் இவர் சைக்கிள் கடையை வைத்துக்கொண்டு வரவங்க கிட்ட எல்லாம் குசும்பாக பேசி கடைக்கு வருகிற ஒவ்வொருவரையும் கலாய்த்து நம்மளை சிரிக்க வைத்திருப்பார்.
நாட்டாமை: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு நாட்டாமை திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, குஷ்பு, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கவுண்டமணி செந்தில் காம்பினேஷன் பக்கவாக தூள் கிளப்பியிருப்பார்கள். அதிலும் செந்தில் சொல்லும் மை சன் என்கிற வார்த்தை ரொம்பவே பிரபலமானது. அடுத்ததாக இப்படம் முழுவதும் சரத்குமார் பெயரை டேமேஜ் செய்யும் விதமாக டீச்சரை நாட்டாமை தம்பி பசுபதி வச்சிருக்கார் என்று தம்பட்டம் அடிக்கும் கவுண்டமணியின் அலப்பறைக்கு அளவே கிடையாது.