சென்னையில் வளர்ந்து அக்கட தேசத்தை மிரளவிடும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச லெவலில் புகழ்பெற்ற பாகுபலி ஹீரோ

Actor Prabhas: உலக அளவில் மிரட்டக்கூடிய படங்கள் இப்போது தமிழ் சினிமாவில் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறது. அதனாலயே பல டாப் ஹீரோக்கள் தமிழ் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். ஆனால் நம்ம சிங்கார சென்னையில் பிறந்து அக்கட தேசத்தை கலக்கி கொண்டு இருக்கும் சில ஹீரோக்களும் இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை இங்கு விரிவாக காண்போம்.

நாக சைத்தன்யா: நாகார்ஜுனாவின் வாரிசான இவர் இப்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். ஆனால் இவருடைய குழந்தை பருவம் முழுக்க சென்னையில் தான் இருந்திருக்கிறது. அப்போது நாகர்ஜுனா தமிழிலும் நடித்து வந்ததால் நாக சைதன்யா சென்னையிலேயே படித்திருக்கிறார். ஆனால் இப்போது அவர் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக மாறி இருக்கிறார்.

பிரபாஸ்: பாகுபலி மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இவர் இப்போது பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடிப்பதை தான் அதிகம் விரும்புகிறார். அதற்கேற்றார் போல் அவருக்கான திரை கதைகளும் அமைந்துவிடுகிறது. இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவரும் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அப்படிப்பட்ட இவர் தெலுங்கு தேசம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் புகழ்பெற்றுள்ளார்.

ராம்சரண்: சிரஞ்சீவியின் மகனான இவர் இப்போது தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் ஹீரோவாக மிரட்டி கொண்டிருக்கிறார். அதிலும் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் படம் இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. இப்படி தெலுங்கில் பிரம்மாண்ட நாயகனாக இருக்கும் இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன்: ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருக்கும் இவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான். குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவாக உருவெடுத்துள்ள இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மகேஷ்பாபு: தெலுங்கு தேச சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருக்கும் இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அதிலும் லயோலா கல்லூரியில் தான் இவர் தன்னுடைய படிப்பை முடித்திருக்கிறார். அதனாலேயே சென்னை மீது ஒரு தனி பாசம் இருப்பதாக இவர் பல முறை மேடைகளில் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறாக இந்த ஐந்து நடிகர்களும் சென்னையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இப்போது தெலுங்கு திரையுலகில் தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதில் சில நடிகர்கள் நேரடி தமிழ் படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →