கலெக்டராய் அசத்திய 5 ஹீரோயின்கள்..

Actress Nayanthara: என்னதான் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்றாலும் அவை பெரிதளவு பேசப்படுவதில்லை. அவ்வாறு இல்லாமல் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் ஏற்ற தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.

அதுபோன்ற பெயர் சொல்லும் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் வெற்றியாகவும் அமைந்துவிடும். அவ்வாறு ஹீரோயின்களாய் நடித்த இந்த ஐந்து நடிகைகளும் கலெக்டர் கேரக்டரில் அசத்திருப்பார்கள். அவர்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

சிம்ரன்: மலையாளத்தில் அறிமுகமாகி அதன்பின் தமிழில் தன் நடிப்பின் மூலம் கனவு கன்னியாய் வலம் வந்தவர் சிம்ரன். இவர் ஏற்ற எண்ணற்ற படங்களில் மாபெரும் வெற்றியை கண்ட படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். விஜய்க்கு ஜோடியாக இடம் பெற்ற சிம்ரன் இப்படத்தில் கலெக்டர் கதாபாத்திரம் ஏற்றி நடித்திருப்பார். மேலும் தன்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு காரணம் தன் காதலன் என்பதை அறிந்து வெளிப்படுத்தும் உணர்ச்சிகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

நயன்தாரா: முன்னணி கதாநாயகியாக இருந்து தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராய் கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் ஏற்ற எண்ணற்ற படங்களில், மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் அறம். இப்படத்தில் மதிவதனி ஐ ஏ எஸ் அதிகாரியாய் இடம் பெற்றிருப்பார். மேலும் கிராமத்தில் ஆழ்துளை கிணறில் மாட்டிக் கொண்ட தன்ஷிகா சிறுமியை காப்பாற்றும் படலத்தில் தன் நடிப்பினை சிறப்புற வெளிக்காட்டி இருப்பார்.

அபிராமி: 2000ல் மனோஜ் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வானவில். இதில் அர்ஜுன், அபிராமி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் அபிராமி, ஐ ஏ எஸ் அதிகாரியாய் இடம் பெற்றிருப்பார். மேலும் தன் காதலன் ஆன அர்ஜுனும் ஐ ஏ எஸ் அதிகாரி ஆவார். இருப்பினும் இத்தகைய முக்கிய கதாபாத்திரம் ஏற்று இப்படம் இவருக்கு கலவையான விமர்சனத்தையே பெற்று தந்தது.

தேவயானி: தன் எதார்த்தமான நடிப்பில் முன்னணி கதாநாயகி ஆக வலம் வந்தவர் தேவயானி. 1997ல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி தந்த படம் தான் சூரியவம்சம். இப்படத்தில் தனக்கேற்ற துணையை ஏற்றுக்கொள்ளும் சரத்குமார் தன் மனைவியான தேவயானியின் வளர்ச்சிக்கு துணையாய் நின்று அவரை ஐ ஏ எஸ் அதிகாரியாய் ஊக்குவிப்பார். அதிலும் குறிப்பாக ஒரே பாடலில் இவை அனைத்தும் நிறைவேறியவாறு இடம் பெற்ற காட்சி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

அனுஷ்கா ஷெட்டி: மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இவர் 2018ல் அசோக் இயக்கத்தில் வெளிவந்த பாகமதி படத்தில் ஐ ஏ எஸ் அதிகாரியாய் இடம் பெற்று இருப்பார். இப்படத்தில் அநீதியை எதிர்த்து நியாயம் கேட்கும் கதாபாத்திரத்திலும், மேலும் தன் காதலனின் இறப்பிற்கு பழி தீர்க்கும் படலமாய் தன் சிறந்த நடிப்பினை வெளிக்காட்டிருப்பார். இதைத்தொடர்ந்து இப்படம் வணிகரீதியான வெற்றியை கண்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →