அனுஷ்கா கிளுகிளுப்பாக ஆடிய 5 ஐட்டம் சாங்ஸ்..

Actress Anushka Hot Songs: நடிகை அனுஷ்கா தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய அதீத உடல் எடை தான். அனுஷ்கா நடிப்பதற்கு வரும் முன்பே யோகா ஆசிரியராக இருந்தவர். இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்கு முன்பு வரை சிக்கென உடலமைப்பை மெயின்டைன் செய்து வந்தார். இவரை பிரபஞ்ச அழகி என்று இந்திய சினிமாவில் சொல்லி வந்தார்கள். சிக்கென உடலை வைத்து அனுஷ்கா ரசிகர்களை கிரங்கடித்த 5 கிளுகிளுப்பான பாடல்கள் இன்றுவரை பிரபலமாக இருக்கின்றன.

மொபைலா மொபைலா: நடிகை அனுஷ்கா தமிழில் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் இரண்டு. இந்த படத்தில் மாதவனுடன், கடற்கரையில் அனுஷ்கா ஆடும் ‘மொபைலா மொபைலா’ பாடல் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இருந்து இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பாடலிலேயே அனுஷ்கா தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

என் உச்சி மண்டைல: அருந்ததி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன் அழகுக்கு அடிமையாக்கியவர் நடிகை அனுஷ்கா. இந்த படத்திற்குப் பிறகு அனுஷ்கா மீண்டும் தமிழில் நடித்த திரைப்படம் தான் வேட்டைக்காரன். தளபதி விஜய் உடன் நடனம் ஆடுவது என்பது எல்லோருக்குமே கொஞ்சம் கடினமாகவே இருக்கும். ஆனால் அனுஷ்கா இந்த படத்தில் வரும் என் உச்சி மண்டையில பாடலுக்கு ரொம்பவும் அசால்ட் ஆகவே ஆடி அசத்தியிருப்பார்.

காதல் வந்தாலே: இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் திரைப்படமாக இருப்பது போல் அந்த படத்தில் வரும் காதல் வந்தாலே பாடலும் இன்று வரை கொண்டாடப்படுகிறது. நடன இயக்குனர் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் அனுஷ்கா, சூர்யாவுடன் இணைந்து இந்த பாடலில் கலக்கியிருப்பார்.

நோ மணி நோ ஹனி: சிம்பு நடித்த வானம் திரைப்படத்தின் அனுஷ்கா, சரோஜா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். இதில் வரும் நோ மணி நோ ஹனி பாடலில் புடவை கட்டி ஆடி இருந்தாலும் அதிலும் பயங்கர கிளாமராக ஆடி அசத்தியிருப்பார். இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

மோனா மோனா: நடிகை அனுஷ்கா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடுக்கடலில் கப்பலில் ரஜினி மற்றும் அனுஷ்கா மோனா கேசலினா என்னும் பாடலுக்கு ஆடி இருப்பார்கள். இந்த பாடலிலும் அனுஷ்கா தன்னுடைய வசீகரத்தால் கலங்கடித்து இருப்பார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →