மணிரத்தினத்தை கொண்டாட என்ன காரணம்ன்னு யோசிக்குறீங்களா?. அப்போ இந்த 5 படத்தை மிஸ் பண்ணாம OTT-ல் பாத்துடுங்க!

Maniratnam: மணிரத்தினம் என்றது இப்போதைய தலைமுறைகளுக்கு பொன்னியின் செல்வன் மற்றும் தக்லைப் படங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்.

இதைத் தாண்டி மணிரத்தினம் என்னும் மகா கலைஞனை இந்திய சினிமா கொண்டாடுவதற்கு காரணமான நிறைய படங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

இருவர்: மோகன்லால் மட்டும் பிரகாஷ் ராஜை முக்கிய கேரக்டராக வைத்து மணிரத்தினம் இயக்கிய படம் தான் இருவர். அது மட்டும் இல்லாமல் ஐஸ்வர்யாராய்க்கு இதுதான் அறிமுகப்படம்.

இந்த படம் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி இருவருக்கும் இடையே இருந்த அழகிய நட்பை பற்றி பேசியது. அரசியல் எதிரிகளாக பார்க்கப்படும் இவர்களின் புனிதமான நட்பை பற்றி தெரிந்து கொள்ள இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

OTT: ஆஹா தமிழ்

அலைபாயுதே: சென்டிமென்ட் கதைகளாலும், சாமி படங்களாலும் நிறைந்திருந்த தமிழ் சினிமாவின் காலகட்டத்தில் புத்துணர்வை கொடுத்த படம் தான் அலைபாயுதே. பெற்றோர்களுக்காக காதலை உதறித் தள்ளும் கதைகள் பல வந்து கொண்டிருந்த காலகட்டம்.

அந்த சமயத்தில் பெற்றோரை மீறி திருமணம் செய்து விட்டு அவரவர் வீட்டிற்கு சென்று இருப்பது என்ற புது லாஜிக் நல்ல வரவேற்பை பெற்றது. இளமை துள்ளலான இந்த படம் எப்போதுமே பசுமை நிறைந்த நினைவுகளை கொண்டது.

OTT: ஆஹா தமிழ்

ஆயுத எழுத்து: இளைஞர்களின் அரசியல் பார்வையை மொத்தமாய் மாற்றி அமைக்கும் சக்தி ஆயுத எழுத்து படத்திற்கு உண்டு. மாதவன், சித்தார்த் மற்றும் சூர்யா இந்த படத்தில் ஹீரோக்களாக நடித்திருந்தார்கள்.

படத்தின் கடைசி காட்சியில் சூர்யா சட்டமன்றத்தில் நுழையும் காட்சி இப்போது பார்த்தாலும் நெருப்பு போன்று இருக்கும்.

OTT: சன் நெக்ஸ்ட்

அஞ்சலி: முழுக்க முழுக்க சின்ன குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் அஞ்சலி. இந்த படத்தில் ரகுவரன், ரேவதி மற்றும் பிரபு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

குழந்தைகளின் சுட்டித்தனம், பெரியவர்களை தாண்டி அவர்களுக்கு இருக்கும் பக்குவம் என இந்த படம் ஒரு கலவையாக இருக்கும்.

OTT: Zee 5

பாம்பே: ஒரு குறிப்பிட்ட இரு மதத்தினர் இடையே காதல் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்ற கதைக்களம் தான் பாம்பே.

இதனுடன் இந்து – முஸ்லிம்களுக்கு இடையே நடந்த மிகப்பெரிய மதக்கலவரத்தை பற்றியும் மணிரத்தினம் ரொம்பவும் தைரியமாக பேசியிருந்தார். இந்த படமும் அவருடைய சிறந்த படங்களின் லிஸ்டில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும்.

OTT: அமேசான் ப்ரைம் வீடியோ

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →