டெபாசிட் இழந்து, மொக்கை வாங்கிய கீர்த்தி சுரேஷின் 5 படங்கள்.. தனுசை நம்பி மோசம் போனது தான் மிச்சம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மற்றும் மலையாளத்தில் கீதாஞ்சலி என்னும் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் தான் கீர்த்தி சுரேஷ். மேலும் தமிழில் சில படங்களே நடித்து இருந்த நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்பொழுது தமிழில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். அவ்வாறு இருப்பின் இவரின் மார்க்கெட்டை கெடுக்கும் விதமாக அமைந்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

தானா சேர்ந்த கூட்டம்: 2018ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் பெருதளவு பேசப்படவில்லை என்றாலும் ஓரளவு வசூலை பெற்றது. மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் ரோல் பெரிதளவு இல்லாததால் அவருக்கு நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று தந்தது.

சாணி காகிதம்: 2022ல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சாணி காகிதம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் பொன்னி என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் பழிவாங்கும் படலத்தில் நடித்திருப்பார் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பு நல்லா இருந்தாலும் மக்களிடம் நேர்மறை விமர்சனத்தை பெற்று தந்தது.

தொடரி: 2006ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தொடரி. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். இப்படம் திகில் கலந்த காதல் படமாக அமைந்திருந்தாலும் போதிய வரவேற்பு பெறவில்லை என்பது வேதனைக்கு உள்ளான செய்தி. மேலும் பெரிதளவு கதை எதுவும் இல்லாததால் இப்படம் தோல்வியை தழுவியது. மேற்கொண்டு தனுஷை நம்பி நடிக்க சென்ற கீர்த்தி சுரேஷ்க்கு இப்படம் மொக்கையாக அமைந்தது.

சண்டக்கோழி 2: 2018ல் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சண்டக்கோழி 2. இப்படத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பாகம் ஒன்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் பாகம் 2 போதிய வரவேற்பை தரவில்லை என்பது வேதனைக்கு உள்ளான செய்தி. மேலும் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் இப்படத்தில் பெரிதளவு பேசப்படவில்லை.

தசரா: அண்மையில் வெளிவந்த தெலுங்கு படமான தசராவில் நானி,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் மக்களின் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று தந்தது. இருப்பினும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கான கதாபாத்திரம் பொருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இத்தகைய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →