வித்தியாசமான நடிப்பால் ஆலமரம் போல் வளர்ந்த 5 நடிகர்கள்

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில நடிகர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே படங்கள் பண்ணியிருந்தாலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளும் மற்றும் வெளிப்படுத்தும் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விடுவார்கள். அப்படி இந்த ஐந்து ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் தங்களுடைய கடின உழைப்பை மட்டுமே நம்பி இன்று ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறார்கள்.

கார்த்தி : தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் கார்த்தி. கிராமத்து இளைஞனாக இருக்கட்டும் அல்லது நகரத்தை சேர்ந்த கதைகளாக இருக்கட்டும் இவர் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றன. தமிழ் வாசகர்கள் இடையே பெயர் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவனாக இவர் நடித்து தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய இடத்தை பெற்று விட்டார்.

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்த பொழுதே இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றாலும், வெள்ளி திரையில் நிலைத்து நிற்பாரா என்பது பலரது சந்தேகமாக இருந்தது. ஆனால் இன்று தளபதி விஜய்க்கு பிறகு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் இருப்பது சிவாவுக்கு மட்டும்தான். கோலிவுட்டில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை இவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ்: சிறந்த இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட ஜிவி பிரகாஷ் நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கதை தேர்வுகளில் சற்றே தடுமாறினாலும், இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்த எந்த ஒரு படத்திலும் தவறியதே இல்லை.

பகத் பாசில்: இவர் மலையாள சினிமா உலகின் விஜய் சேதுபதி என்றே அழைக்கப்படுகிறார். வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தன்னுடைய நடிப்பின் மூலம் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய அடுத்த படத்திற்காக ஏங்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

துல்கர் சல்மான் : நடிகர் துல்கர் சல்மான் இன்று வரை தன்னை ஒரு சாக்லேட் ஹீரோவாக சினிமாவில் அடையாளப்படுத்தி இருக்கிறார். தமிழில் ஓகே கண்மணி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார். இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →