செல்வாக்கை வைத்து என்ட்ரி கொடுத்த 6 நடிகர்கள்

6 Actors: தன் தந்தையின் சிபாரிசில் நடிக்க வாய்ப்பு பெற்று, ஓரிரு படங்களில் நடித்து விட்டு காணாமல் போன நடிகர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு இன்று வரை திரைத்துறையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத 6 நடிகர்களை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

உதயநிதி: தமிழ் சினிமாவில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பை மேற்கொண்டு எண்ணற்ற படங்களை விநியோகித்து வெற்றி காணும் இவர் நடிக்கும் ஆசை கொண்டு மேற்கொண்ட ஒரு சில படங்களில் பேசப்பட்டாலும், தொடர்ந்து நடிப்பில் வெற்றி கொண்டு தன்னை நடிகராய் அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மேலும் அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

விக்ரம் பிரபு: பிரபுவின் மகனான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சிபாரிசால் கால் பதித்தவர். அவ்வாறு இருக்க, இவர் மேற்கொண்ட முதல் படமான கும்கியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் பெரிதும் பேசப்படவில்லை. தற்பொழுது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கௌதம் கார்த்திக்: நவரச நாயகனாக கார்த்திக்கின் மகனான இவர் கடல் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தான் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் ஏற்ற படங்கள் இவருக்கு பெரிதளவு கை கொடுக்காமல் அவ்வப்பொழுது தமிழ் சினிமாவில் தலை காட்டி வருகிறார்.

விஷால்: தந்தை, அண்ணனின் சிபாரிசில் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவர் செல்லமே என்னும் படத்தின் மூலம் நடிகராய் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து எண்ணற்ற படங்களில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். இருப்பினும் இன்னும் முட்டி மோதிக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் தான் இருந்து வருகிறார்.

அதர்வா: நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பரதேசி என்னும் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். அதன் பிறகு இவர் ஏற்கும் கதாபாத்திரம் இவருக்கு போதிய வரவேற்பை பெற்று தரவில்லை. இருப்பினும் தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

துருவ் விக்ரம்: மாறுபட்ட பரிமாணத்தில் அசத்தி வரும் சீயான் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம். இவர் மேற்கொள்ளும் படங்களும் போதிய வரவேற்பை பெற்று தரவில்லை. இருப்பினும் தன் நடிப்பின் ஆர்வத்தால் அடுத்தடுத்த படங்களில் முயற்சித்து வருகிறார்.

இவர்கள் வரிசையில் சிபாரிசு நடிகரான விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் வெற்றி படங்களை கொடுத்து, தன்னை பெரிய உச்ச நடிகர்களாக அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →