மின்னல் மாதிரி வந்து ஒரே படத்தில் காணாமல் போன 6 நடிகைகள்

One Movie Acted Actress: சினிமாவில் எத்தனையோ நடிகைகள் சாதிக்க வேண்டும் அவர்களுடைய படங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற ஆசையில் வருவார்கள். அப்படி வந்ததுமே நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு சில நடிகைகள் தொடர்ந்து நடிக்காமல் சினிமாவை விட்டு எங்கே போனார்கள் என்று தேடும்படியாக காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த நடிகைகள் யார் என்று பார்க்கலாம்.

மானு : இவர் காதல் மன்னன் என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திலோத்தமா என்ற கேரக்டரில் நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. அத்துடன் இவரை பார்ப்பதற்கு ரொம்பவே அம்சமான ஒரு நடிகையாக, அனைவரையும் பார்வையாலேயே சொக்க வைத்திருப்பார். அப்படிப்பட்ட இவர் இந்த படத்தில் நடித்ததும் எங்கே போய்விட்டார் என்று தெரியாமல் அடுத்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன் பின்பு 2014 ஆம் ஆண்டு என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தின் மூலம் மறுபடியும் வந்தார் ஆனால் வந்த இடம் தெரியாமலேயே போய்விட்டது.

அமோகா: இவர் தமிழில் ஜே ஜே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனமும் இவர் மேல் திரும்பியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹிந்தி, தெலுங்கில் கவனம் செலுத்தி அங்கே போய்விட்டார். இவருக்கு ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க்கெட் இல்லாமல் ஓஞ்சு போய்விட்டார்.

ரோஷினி: இவர் கமல் நடிப்பில் வெளிவந்த குணா படத்தில் அபிராமி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த ஒரு படத்தை தவிர வேறு எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை. ஆனால் நடித்த ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.

பிரியா கில்: இவர் தமிழில் நடித்த ஒரே படம் ரெட். இதில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பின் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வந்த இவர் தமிழில் வேறு எந்த படங்களும் நடிக்காமல் போய்விட்டார். அதன் பின் ஒரு காலகட்டத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டார்.

மோனிகா கேஸ்டலினோ: இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகையாக இடம்பெற்றார். ஆனால் அந்த ஒரு படத்திற்குப் பிறகு தமிழில் முகத்தை காட்டாமல் ஹிந்தியில் நடிக்கப் போய்விட்டார். அதுவும் கவர்ச்சி நடிகை ஆக நடித்து இருக்கிறார். பின்பு அதுவும் கொஞ்சம் படங்களுக்கு அப்புறம் சினிமாவை வேண்டாம் என்று போய்விட்டார்.

ரிங்கி கண்ணா: ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் மஜ்னு என்ற படத்தில் மட்டும் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதன்பின் ஹிந்தியில் இரண்டு மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →