இளைஞர்கள் மத்தியில் இன்னும் க்ரஷ் ஆக உள்ள 6 நடிகைகள்.. 50 வயதிலும் அசால்ட் பண்ணும் ஆன்ட்டிகள்

ஹீரோயின்களை பொறுத்தவரையில் ஒரு காலகட்டம் வரையில்தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். ஆனால் இதில் சில நடிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது. ஏனென்றால் தற்போதும் இளைஞர்கள் மத்தியில் இந்த நடிகைகளுக்கு இன்னும் கிரஷ் உள்ளது. அவ்வாறு உள்ள 6 நடிகைகளை இப்போது பார்க்கலாம்.

குஷ்பூ : ஒரு காலகட்டத்தில் ஒல்லியாக உள்ள நடிகைகள் மட்டுமே ஹீரோயினாக முடியும் என்று ட்ரெண்டை மாற்றியவர் நடிகை குஷ்பூ. ஆனால் இப்போது தனது உடம்பை குறைத்து படுஸ்லிம்மாக மாறி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளார். இப்போதும் இவருக்கு ஏராளமான ரசிகர் உள்ளனர்.

மீனா : குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் மீனா. இவருடைய காந்தக் கண்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்போதும் சில படங்களில் நடித்து வரும் மீனாவின் மீது ரசிகர்களுக்கு கிரஷ் உள்ளது.

ரம்யா கிருஷ்ணன் : மேகியாக ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். மேலும் படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டி இருந்தார். பாகுபலி படத்தில் இவரது சிவகாமி தேவி கதாபாத்திரம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. இப்போதும் இவருக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ளது.

நதியா : எவர்கிரீன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நதியா. ரஜினி, பிரபு என டாப் நடிகர்களுடன் நடித்த நதியா திருமணத்திற்குப் பின்பு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது படங்களில் கலக்கி வருகிறார்.

பானுப்பிரியா : எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பானுப்ரியா. சாதாரண குடும்பப் பெண் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பானுப்பிரியா பொருந்தக் கூடியவர். தற்போது ஹீரோக்களுக்கு அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்த அசத்தி வருகிறார்.

நிரோஷா : வசீகரமான தோற்றத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை நிரோஷா. பெரும்பாலும் கார்த்திக், நிரோஷா காம்போவில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் தனது பங்களிப்பை நிரோஷா கொடுத்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →