சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் சாதித்து காட்டிய 6 பிரபலங்கள்.. சிங்கப் பெண்ணாக கர்ஜித்த ஜெயலலிதா

பொதுவாக மக்களிடமிருந்து ஓட்டு வாங்க வேண்டும் என்றால் அவர்களிடம் நன்கு பரீட்சையமானவர்களாக இருந்தால் மட்டுமே வாக்குகளை பெற முடியும். இதனால் தான் பல பிரபலங்கள் சினிமாவில் நுழைந்து அதன் மூலம் தங்களை பிரபலமாக்கிக் கொண்டு அரசியலில் இறங்குகிறார்கள். அப்படி சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சாதித்து காட்டிய 6 பிரபலங்களை பார்க்கலாம்.

எம்ஜிஆர் : கோடான கோடி மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தனது படங்களின் மூலம் அடித்தட்டு மக்கள் மனதில் அச்சாரம் போட்டு பதிந்தவர். இதன் மூலம் அரசியலுக்கு வந்த பல திட்டங்களை மக்களுக்காக கொடுத்துள்ளார். இன்றும் எம்ஜிஆருக்காகவே அதிமுகவில் வாக்களிக்கும் மக்கள் உண்டு.

கருணாநிதி : சிறு வயது முதலே நாடகம், கவிதை, இலக்கியம் என அனைத்திலும் ஆர்வம் கொண்ட கலைஞர் கருணாநிதி அதன் பின்பு நாடகங்களுக்கு கதை எழுத ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி பல படங்களுக்கு கதை, வசனம் ஆகியவற்றை எழுதி உள்ளார். அண்ணா மீது உள்ள ஈடுபாடால் கலைஞர் திமுகவில் பல பொறுப்புகள் வகித்தார். இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பொறுப்பேற்று உள்ளார்.

ஜெயலலிதா : எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயலலிதா. மேலும் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியை ஜெயலலிதா வழிநடத்தி சென்றார். ஜெயலலிதா 5 முறை தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தார். அப்போது தமிழ்நாட்டில் ஒரு சிங்கப் பெண்ணாக ஜெயலலிதாவின் குரல் கர்ஜித்தது.

விஜயகாந்த் : சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி மக்கள் மத்தியிலும் சரி இவருக்கென்று ஒரு தனி மரியாதை அனைவரிடத்திலும் இருக்கிறது. இதன் மூலம் தேதிமுக என்ற அரசியல் கட்சியினை விஜயகாந்த் ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி எதிர்ப்பு கட்சி தலைவராகவும் விஜயகாந்த் பொறுப்பில் இருந்துள்ளார்.

நெப்போலியன் : ஹீரோவாக நடித்தாலும் வில்லன் கதாபாத்திரம் தான் நெப்போலியனுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை தர ஆரம்பித்தது. தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலுமே நெப்போலியன் கலக்கி உள்ளார். இவர் அமைச்சராகவும் பொறுப்பேற்று இருந்தார்.

ரோஜா : தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் ரோஜா. சினிமாவில் கிடைத்த வரவேற்பினால் அரசியலிலும் ரோஜா இணைந்தார். அதன்படி ஆந்திராவில் சட்டசபை உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ரோஜா பொறுப்பில் உள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →