குணச்சித்திர கேரக்டரில் விவேக் நடித்து வெற்றி கண்ட 6 படங்கள்..

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் தான் விவேக். பொதுவாகவே இவரது படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று அளவிற்கு தனது சிறப்பான பங்களிப்பை கொடுக்கக் கூடியவர் ஆவார். அதிலும் இவரது நடிப்பில் காமெடியையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். அப்படியாக குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

பாய்ஸ்: ஏ எம் ரத்னம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இதில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ஆனது பிரண்ட்ஷிப்பிற்குள் நடக்கும் அட்ராசிட்டிகளை மையமாக வைத்து வெளியான  திரைப்படம் ஆகும். அதிலும் விவேக் இப்படத்தில் சுந்தரம் என்னும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.

பேரழகன்: சசி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேரழகன். இதில் சூர்யா இரு மாறுபட்ட வேடங்களில் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் சூர்யா உடன் ஜோதிகா, மனோரமா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் விவேக் திருமண வரன் பார்ப்பவராக குழந்தைசாமி என்னும் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.  

அந்நியன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன். இதில் விக்ரம், பிரகாஷ்ராஜ், சதா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் பன்மனோபாவ ஒழுக்கமின்மை நோயினை மையமாகக் கொண்டு அமைந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விவேக், சாரி என்னும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் விக்ரமின் நண்பனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

சிவாஜி: ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. இதில் ரஜினிகாந்த், மணிவண்ணன், விவேக், ஸ்ரேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஏழைகளுக்காக மருத்துவமனை மற்றும் கல்வியை இலவசமாக வழங்குவதை மையமாக வைத்து படமானது அமைந்திருக்கும். இதில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அறிவு என்னும் கேரக்டரில் விவேக் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். 

உத்தமபுத்திரன்: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உத்தமபுத்திரன். இதில் தனுஷ் உடன் ஜெனிலியா, விவேக், பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதில் விவேக் எமோஷனல் ஏகாம்பரம் என்னும் கேரக்டரில் நடித்து நடிகர் தனுசையை வெளுத்து வாங்கி இருப்பார். இதனைத் தொடர்ந்து இப்படம் விமர்சகர்களின் நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

வேலையில்லா பட்டதாரி: வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷ் உடன் அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படமானது வேலையில்லா பட்டதாரிகளின் திண்டாட்டத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் ஆகும். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் அழகு சுந்தரம் என்னும் கதாபாத்திரத்தில் விவேக் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →