பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகுது என்றால் நடிகர் நடிகைகள் எவ்வளவு பதற்றத்துடன் இருக்கிறார்களோ அதைவிட தயாரிப்பாளர்கள் மிகுந்த பயத்தில் இருப்பார்கள். அதற்கு காரணம் அந்த படத்தில் அவர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்ற ஒரு சந்தேகம் தான். மேலும் படங்கள் வெளிவந்த பிறகு ஹீரோக்களை திருப்தி படுத்தவே படம் சூப்பர் ஹிட் பெரிய லாபம் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்களுக்கு லாபம் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான். ஆனால் இதையெல்லாம் தாண்டி நிஜமாகவே தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்திய ஐந்து படங்கள் இருக்கிறது. ரஜினி, கமலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன்: மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று 500 கோடிக்கும் மேல் வசூலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. இதனுடைய இரண்டாம் பாகம் 350 கோடிக்கு மேல் வசூலில் லாபம் பெற்றது. அத்துடன் இந்த வருடம் வெளிவந்து வசூல் செய்த வாரிசு மற்றும் துணிவு படங்களின் சாதனையை முறியடித்தது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் லாபத்தை பார்த்து அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த வருடம் டான் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலில் வெற்றி பெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன். இதனால் இருவருக்குமே லாபம் கிடைக்கும் வகையில் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வருடம் லவ் டுடே திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரதீப் ரங்கநாதன், இவானா, ரவீனா ரவி, யோகி பாபு, சத்யராஜ் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 150 கோடிகளை வசூலித்தது. அந்த அளவிற்கு லாபம் கிடைத்தது. இதனால் தயாரிப்பாளர்கள் ரொம்பவே திருப்தி அடைந்தார்கள். ஏனென்றால் கம்மி பட்ஜெட்டில் செலவு செய்து லாபத்தை பார்த்திருக்கிறார்கள்.
மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு மாநாடு திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அத்துடன் வசூல் ரீதியாக 160 கோடிக்கு லாபம் பெற்றது. இந்த படத்திற்கு முன் சிம்புவுக்கு எதுவும் சொல்லிக்கிற அளவுக்கு எந்த படங்களும் ஓடவில்லை. அவரை தூக்கிவிடும் விதமாக இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
திருச்சிற்றம்பலம்: மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் 110 கோடி வசூலை பெற்றது. பொதுவாகவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் என்றாலே அதிக அளவில் பிரமோஷன் செய்வார்களே தவிர அதிக லாபம் இருக்காது. ஆனால் இப்படம் எல்லாத்துக்கும் எதிர் மாறாக சன் பிக்சர்ஸ் தயாரித்தும் அதிக லாபத்தை பெற்று கொடுத்த பெருமை இப்படத்தை சாரும்.
விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் விக்ரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்த அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு சீனையும் செதுக்கி இருப்பார்கள். இப்படம் துவண்டு போய் இருந்த கமலுக்கு பக்கபலமாக அமைந்தது. ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த வகையில் வெற்றி பெற்றது. இப்படம் 500 கோடி வரை வசூல் செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியது. இதில் தயாரிப்பாளராக ராஜ்கமல் நிறுவனம் இருந்ததால் கமலுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தது.