Junior Balaiya: கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்து தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் தான் நடிகர் ஜூனியர் பாலையா. அத்துடன் சின்னத்திரை தொலைக்காட்சியிலும் இவருடைய நடிப்பை கொடுத்து பிரபலம் ஆகி இருக்கிறார். முக்கியமாக சித்தி, வாழ்க்கை மற்றும் சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய நடிப்பில் வெளிவந்த மறக்க முடியாத படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
கரகாட்டக்காரன்: கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ராமராஜன், கனகா, சந்தன பாரதி, கவுண்டமணி, செந்தில் மற்றும் ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் தவில் வாசிப்பவராக வருவார். அத்துடன் பேமஸான வாழைப்பழ காமெடியில் கவுண்டமணி செந்திலுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்த்து வைக்கும் கேரக்டரில் அங்கீகாரத்தை பெற்றிருப்பார்.
கோபுர வாசலிலே: பிரியதர்ஷன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு கோபுர வாசலிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்திக், பானுப்ரியா, சுசித்ரா, நாசர், ஜனகராஜ், சார்லி மற்றும் ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்தியின் நண்பராக நடித்திருக்கிறார். முக்கியமாக இந்த படத்தில் வரும் தேவதை போல் ஒரு பெண் என்ற பாடலில் இவருடைய பெர்பாமென்சை ரசிக்கும் படியாக கொடுத்திருப்பார்.
சுந்தர காண்டம்: கே பாக்யராஜ் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு சுந்தரகாண்டம் திரைப்படம் வெளிவந்தது. இதில் பாக்கியராஜ், பானுப்ரியா மற்றும் ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் காலேஜ் வாத்தியாராக நடித்து நக்கல் நையாண்டி பேச்சை கொடுத்து அனைவரிடமும் கைதட்டலை பெற்றிருக்கிறார்.
ஜெயம்: மோகன் ராஜா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு ஜெயம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, சதா, ராதாரவி, நளினி மற்றும் ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜோசியக்காரர் கேரக்டரில் நடித்து சதா மற்றும் ஜெயம் ரவியின் காதலை வீட்டிற்கு தெரியப்படுத்திருப்பர்.
சாட்டை: அன்பழகன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சாட்டை திரைப்படம் வெளிவந்தது. இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் ஒரு நேர்மையான பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா நடித்திருப்பார். அத்துடன் சமுத்திரக்கனிக்கு ஆதரவாகவும் நல்ல விஷயங்களை செய்யக்கூடிய கேரக்டரில் நடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றிருப்பார்.
நேர்கொண்ட பார்வை: எச் வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அபிராமி வெங்கடாசலம், வித்யா பாலன் மற்றும் ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜூனியர் பாலையா வக்கீலாக நடித்திருப்பார். சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்.